Su. Venkatesan > Quotes > Quote > Nirmal liked it

Su. Venkatesan
“பாறையின் மேலேறிய உதிரனுக்கு கபிலர் ஏன் ஏறாமல் நிற்கிறார் என்ற காரணம் புரியவில்லை.

"நான் எங்கே நிற்கிறேன்?" என்று கேட்டார் கபிலர்.

"கீழே நிற்கிறீர்கள்" என்றான் உதிரன்.

"காரமலையின் உச்சியில் நின்றாலும் நான் கீழே நிற்பதாகத்தானே உனக்குத் தோன்றுகிறது" என்றார். கபிலர் சொல்லவருவது உதிரனுக்குப் புரியவில்லை.

கபிலர் விளக்கினார். "உண்மை என்பது இருக்குமிடம் சார்ந்தது. அதனால்தான் நான் கீழே இருப்பதாகக் கண நேரத்தில் நீ முடிவு செய்துவிட்டாய். நீ சொல்வது உன்னளவில் மட்டுமே உண்மை. அதுவே முழு உண்மையாகிவிடாது. எல்லோரும் ஓரிடத்தில் நிற்கப்போவதில்லை. எனவே, எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதில்லை.”
Su. Venkatesan, வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

No comments have been added yet.