Kava Kamz > Quotes > Quote > Aravindh liked it

“பலநூறு புத்தகங்களை படித்துத் தேர்ந்த இலக்கியவாதி இல்லை.... அரசியல் முதல் அணு உலை வரைச் சலித்தெடுக்கும் எழுத்தாளரும் இல்லை.... மற்றவர் கருத்தை ஆராய்ந்து எதிர்க்குரல் கொடுக்கும் விமர்சகரும் இல்லை... இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு மேடையில் பேச என்னிடம் எதுவுமில்லை... ப்ளாக் எழுதும் பழக்கமில்லை.. பேஸ்புக்கிலும் தினம் கிறுக்கியதில்லை..‌ எழுத்தாளர்களைச் சந்தித்து அவர்களை உணரவும் முயற்சித்ததில்லை... ஆனால் சிறுவயதிலிருந்து, கதைகள் மேலிருக்கும் ஒரு காதல்; மயக்கம்; ஈர்ப்பு.... நான் வாசித்து பூரிப்படைந்த தருணங்கள் பல.. காய்ச்சல் சமயங்களில் கூட நாவல்களை வாசித்து காய்ச்சலின் வீரியத்தைக் குறைக்க முயன்றிருக்கிறேன். கதைகள் நம் காலத்தின் அடையாளங்கள்... அது மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை அனுபவித்து உணர்ந்திருக்கிறேன்.. அத்தகைய சுவாரசியமான நாவல்களை இந்த உலகத்திற்கு கொடுக்க முயன்று கொண்டிருக்கும் ஒரு சாதாரண நாவலாசிரியர் நான்! :) :) :)”
Kava kamz

No comments have been added yet.