Joe D'Cruz > Quotes > Quote > Muruganandam liked it

Joe D'Cruz
“தனங்களின் நடுவே தங்கச் சிலுவை. வெள்ளி அரைஞாண்கொடி உதட்டில் படும்போது சில்லென்றிருக்கிறது. பால் குடிக்கிறியரா? பனம் பட்டையில் புளிப்பு வாடையோடு கள். குடிக்கக் குடிக்கப் பட்டை நிறைகிறது. பனை மரத்தடியில் துப்பாசியார் சுருண்டு கிடக்கிறார். காகம் வந்து தலையைத் தட்டிவிட்டுப் போகிறது. இருட்டிவிட்டது. பனைகளில் ஆந்தைகள் மாறி மாறி அலறுகின்றன. ஏவ குட்டியாண்டியாரே எங்க போறீயரு? குட்டியாண்டியார் ஓடை மரக்காட்டுக்குள் கூனை வளைத்தபடி போகிறார். பின்னாலேயே போகிறான். சுற்றிலும் முள் மரங்கள். பாதையே இல்லை. பெரிய ஓடை மரத்தின் மீது குட்டியாண்டியார் ஏறிக்கொண்டிருக்கிறார். தாண்டிப் போகிறான். உறுமல் சப்தம் கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறான். மரத்தில் அவரைக் காணவில்லை. நிதானமாய்ப் பார்க்கிறான். மேல் கவட்டைக் கிளையில் இரண்டு கண்கள் தெரிகின்றன. உறுமல் பெரிதாய்க் கேட்கிறது. பச்சைப் பளிங்குக் கண்கள் சுடர்ந்து கூர்மையாக அவனையே பார்க்கின்றன. பூனையா? புலியா? மூச்சுக்கேற்ப அதன் வயிறு இளைத்துக் கொண்டிருக்கிறது. மஞ்சள் உடலில் வரிகள். புலிதான். பிரமாண்டமான புலி. சடாரென்று அவன் மீது பாய்கிறது. பதறி ஓடுகிறான். துரத்துகிறது. உடம்பெல்லாம் முட்கள் கீற ரத்த விளாறு. ஓட்டம். ஓட்டம். தோப்புக் கிணற்றைக் கடந்து மையாவடியின் ஊடாக விழுந்து ஓடி மடக்கில் தண்ணிக்குள் பாய்கிறான். கடலில் எந்த மரத்தையும் காணோம். விரளமாய்க் கிடக்கிறது. நீந்திக் கொண்டிருக்கிறான். ஆழிக்கு வெலங்க நீந்துகிறான். கைகள் துவண்டபோது சோநீவாடு இழுக்கிறது. பின்னால் நீர் கலையும் சப்தம் கேட்டுத் திரும்புகிறான். பெரிய ஆரஞ்சுப்பழம் போல கருப்பாக ஒன்று இவனைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. மீனின் கண். ஐயோ பெரிய மீன். நீருக்கு மேல் தலை உயர்த்தி வாயைப் பிளக்கிறது. குத்து வாட்கள்போல் பற்கள் மின்னுகின்றன. ரம்பம் போல் பெரிய வெண்பற்கள். வாய் குகை போலிருக்கிறது. நீந்தி விலக முயல்கிறான். துள்ளி எழுந்து அவன் மீது பாய்ந்த குகை அப்படியே அவனைக் கவ்விக்...”
ஜோ டி குருஸ் [Joe D Cruz], ஆழி சூழ் உலகு

No comments have been added yet.