Goodreads Tamil Librarians Group discussion
General
>
ஆகூழ் - புதிய புத்தக சேர்க்கை
date
newest »
newest »
வணக்கம்! இது ரமா சுரேஷின் முதல் புத்தகமா? அப்படி என்றால் ரமா சுரேஷ் பற்றிய ஒரு சிறிய biodata அனுப்புங்கள். நன்றி.
மன்னிக்கவும். சரவணன் மாணிக்கவாசகம் ஏற்கனவே இணைக்கப்பெற்றுவிட்டார். பெயர் மாத்திரம் தமிழில் இல்லை. மாற்ற முடிந்தால் நல்லது.
https://www.goodreads.com/book/show/2...
உடனடியாக உதவ முன்வந்ததற்கு மிக்க நன்றி!
- பிரேம்
ஆசிரியர் பெயரை தமிழாக்க வேண்டாம். அது உலக வாசகர்களுக்கானது.
Premanand wrote: "வணக்கம்,
ரமா சுரேஷின் “அம்பரம்” ஏற்கனவே இங்கெ உள்ளது.
https://www.goodreads.com/book/show/6...
பிரேம்."
Premanand wrote: "வணக்கம்,
ரமா சுரேஷின் “அம்பரம்” ஏற்கனவே இங்கெ உள்ளது.
https://www.goodreads.com/book/show/6...
பிரேம்."
Aruna wrote: "ஆசிரியர் பெயரை தமிழாக்க வேண்டாம். அது உலக வாசகர்களுக்கானது.Premanand wrote: "வணக்கம்,
ரமா சுரேஷின் “அம்பரம்” ஏற்கனவே இங்கெ உள்ளது.
https://www.goodreads.com/book/show/6...
பிரேம்.""
இல்லை... ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடவில்லை. புத்தகத்தின் பெயரைத்தான் குறிப்பிட்டேன் .
அதை மாற்றியதற்கு நன்றி !



முதலிலேயே "Goodreads Librarians Group" பக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பே கோரிக்கை எழுப்பியிருந்தேன். இதுவரை சேர்க்கப்படவில்லை .
இங்கே இருக்கும் தமிழ் லைப்ரரியன் யாரவது உதவ முடியுமா ?
* Title: ஆகூழ்
* Author(s) name(s): ரமா சுரேஷ்
* ISBN : 9789347842016
* Publisher:நூல் வனம் (Nool Vanam)
* Publication Date Year:2026
* Publication Date Month: August
* Page count:408
* Format : hardcover
* Description:
அன்று வேற்று இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் என் கண்களை நேராகப் பார்த்து, முகத்திற்கு முன் விரலை நீட்டி,
"ஏய், இந்தியப் பெண்ணே! நீ மிகவும் கருப்பானவள். உன் நாட்டில் நீ தீண்டத்தகாதவள். சாதியில் கீழானவள். உன்னைவிட நான் சிவப்பானவள்; உயர்வானவள்," என்ற கத்தியப்போது, ஒரு கணம் நான் ஆடிப்போனேன்.
கோபம் தலைக்கேறியது. "நான் யார் என்று எனக்குத் தெரியும்," என்ற அகந்தையில், "பைத்தியம்" என்று அவளைச் சொல்லிவிட்டேன்.
அந்தச் சொல்லை உதிர்த்த அடுத்த நொடியே, என் உள்ளிருந்து ஒரு குரல் எழுந்தது:
"அப்படியென்றால், உன் பாட்டன், தாத்தா, நீ... நீங்கள் எல்லோரும் பைத்தியமா?"
அந்தக் கேள்வி என் செருக்கை ஒரே அடியில் சிதைத்தது. உடல் வேர்த்தது. கண்கள் கசிந்தன.
ஒருமுறை என் மகள் வேர்கள் நாவலைப் படித்து முடித்துவிட்டு என்னிடம் கேட்டாள்:
"நீ யாரிடமாவது மன்னிப்பு கேட்டிருக்கிறாயாம்மா?"
"எதுக்குடா, ராசாத்தி?" என்று நான் கேட்டேன்.
அவள் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
"கறுப்பின மக்களை வெள்ளையர்கள் அடிமைப்படுத்தியதற்காக இன்றுவரை எல்லோரும் அவர்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை. அதுபோலத்தான் நீங்களும் நானும். நம் பாட்டன், பாட்டி, முன்னோர்கள் செய்த தவறுகளுக்காக நாம் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை."
அன்று அவள் சொன்ன அந்த உண்மை, இன்று முழு அர்த்தத்துடன் என்னை வந்தடைந்தது.
அம்மினி அம்மாயியின் ஒவ்வொரு செயலையும் பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் அவரருகில் அமர்ந்ததில்லை.
இந்த உலகின் பேரழகிகள் என்று நான் ரசித்த வள்ளியையும் ராணியையும் கட்டித்தழுவ நினைத்ததில்லை.
வீட்டில் யார் சாப்பிட்டாலும் ஊட்டிவிடு என்று சொல்லும் நான் அன்னக்கிளி அம்மாயி சாப்பிடும்போது, "ஊட்டிவிடு" என்று ஒருமுறைகூட கேட்டதில்லை.
இருந்தும், அவர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு இந்த நாவலை நான் எழுதியிருக்கிறேன்.
அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது?
அந்த வேற்று இனப் பெண்ணின் வார்த்தைகள் வழியாக, இந்தப் பிரபஞ்சமே என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டதாக உணர்கிறேன்.
"மன்னிப்பு" என்ற வார்த்தை, அது கேட்கப்படும் இடத்தைப் பொறுத்து உயர்ந்த சொல்லாக மாறுகிறது.
என் ஆழ்மனத்தின் அடித்தளத்திலிருந்து, இரண்டு துளி கண்ணீருடன் நான் மன்னிப்பு கேட்கிறேன்.
மன்னித்துவிடுங்கள்.
இந்த நாவலை, உங்களின் மன்னிப்புக்கு அர்ப்பணிக்கிறேன்.
* Language (for non-English books): Tamil
* Link to book page : https://www.panuval.com/aakoozh-10030534