Goodreads Tamil Librarians Group discussion
General
>
புதிய புத்தகம் சேர்க்கக் கோரிக்கை - இல்லறச்சல்லடை
date
newest »
newest »
புத்தகம் சேர்க்கப்பட்டாயிற்று. ஆனால் உங்களை பற்றிய சிறிய அறிமுகமும் (biodata with photo), உங்களது முழுப்பெயரும் (first name, last name), உங்களது சமூக வலைதள முகவரியும் (link) அனுப்பவும்.
Aruna wrote: "புத்தகம் சேர்க்கப்பட்டாயிற்று. ஆனால் உங்களை பற்றிய சிறிய அறிமுகமும் (biodata with photo), உங்களது முழுப்பெயரும் (first name, last name), உங்களது சமூக வலைதள முகவரியும் (link) அனுப்பவும்."புகைப்பட முகவரி:https://www.wikidata.org/wiki/Q141381335
சமூகவளைதள முகவரி: https://www.instagram.com/reel/DHqnas...
இணையதள முகவரி:https://sites.google.com/view/kanthal...
பெயர்: செ.கார்த்திக் (Karthik S)
தந்தை பெயர் :செல்வமணி (Selvamani)
Author Name (Display Name): காந்தளின் காதலன் கார்த்திக்
என்னைப் பற்றிய சுயகுறிப்பு (About Me):
வணக்கம்,
நான் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் அமைந்துள்ள படப்பனார்வயல் எனும் சிற்றூரைச் சேர்ந்தவன். நவீன சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகளையும் தத்துவங்களையும் தமிழ் செய்யுள் வடிவில் வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
தமிழ் நாட்காட்டியின்படி கார்த்திகைத் திங்களில் பிறந்த நான், அத்திங்களுக்குரிய 'காந்தள்' மலரையும் தமிழ் மொழியையும் என் உயிர்நிகர் நேசமாகக் கொண்டதால் 'காந்தளின் காதலன் கார்த்திக்' எனும் புனைப்பெயரை என் இலக்கிய அடையாளமாக ஏற்றுக்கொண்டேன்.
சங்க இலக்கிய மரபின் தூய்மையையும், சித்தர் பாடல்களின் கூர்மையான போலிமை மறுப்பையும் தற்கால வாழ்வியலோடு பிணைப்பதே என் எழுத்தின் தனித்துவமாகும். சமுதாயத்தில் வேரூன்றியுள்ள சாதியப் பாகுபாடுகள், மூடநம்பிக்கைகள் மற்றும் போலி ஆச்சாரங்களை எதிர்த்துத் துணிச்சலானக் குரலை என் கவிதைகள் வழியே எழுப்பி வருகிறேன்.
222 வெண்பாக்கள் கொண்ட 'இல்லறச்சல்லடை' எனும் சீர்திருத்தக் கவிதை நூல் என் முதன்மைப் படைப்பாகும். தற்சமயம் என் சுயசரிதையையும், என் சொந்த ஊரின் வரலாற்றுப் பதிவுகளையும் உள்ளடக்கிய எனது அடுத்த நூல்களுக்கான எழுத்துப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன்.
நன்றி!
Profile created successfully.
https://www.goodreads.com/author/show...
Kanthalin wrote: "Aruna wrote: "புத்தகம் சேர்க்கப்பட்டாயிற்று. ஆனால் உங்களை பற்றிய சிறிய அறிமுகமும் (biodata with photo), உங்களது முழுப்பெயரும் (first name, last name), உங்களது சமூக வலைதள முகவரியும் (link) அனுப்பவும..."
https://www.goodreads.com/author/show...
Kanthalin wrote: "Aruna wrote: "புத்தகம் சேர்க்கப்பட்டாயிற்று. ஆனால் உங்களை பற்றிய சிறிய அறிமுகமும் (biodata with photo), உங்களது முழுப்பெயரும் (first name, last name), உங்களது சமூக வலைதள முகவரியும் (link) அனுப்பவும..."



என்னுடைய புதிய கவிதை நூலை Goodreads தமிழ் தரவுத்தளத்தில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புத்தகத்தின் பெயர்: இல்லறச்சல்லடை (Illarachalladai)
ஆசிரியர் பெயர்: கார்த்திக் (காந்தளின் காதலன்)
மொழி: தமிழ்
வகை: கவிதைத் தொகுதி (222 வெண்பாக்கள்)
நூல் அறிமுகம்: 'இல்லறச்சல்லடை' 222 வெண்பாக்களைக் கொண்ட ஒரு சீர்திருத்தக் கவிதைத் தொகுப்பாகும். இல்லற வாழ்வின் அடியிலுள்ள போலித்தனங்களை சலித்தெடுக்கும் சல்லடையாக, தனித்தனியே பிரித்து எடுத்து மெய்யான அன்பையும், மனிதநேயத்தையும், சமூகச் சமத்துவத்தையும் நிலைநாட்டுவதை இந்நூல் முதன்மை நோக்காய்க் கொண்டுள்ளது.இல்லறத்தின் வழியே இறைவனை அடையும் மெய்யான துறவறத்தை போதிக்கிறது.
தயவுசெய்து இந்தப் புத்தகத்தை Goodreads பட்டியலில் சேர்த்து உதவவும். நன்றி!