வாசித்தது:- கூரை (இலக்கிய சிந்தனை 2001 ஆம் ஆண்டின் 12 சிறந்த சிறுகதைகள் தொகுப்பு) பதிப்பகம்:- வானதி
2001ல் வெவ்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகள் மாதத்திற்கு ஒன்றாகத்தேர்வு செய்யப்பட்ட 12 சிறுகதைகள் இந்த தொகுப்பில் உள்ளன. ஒவவொரு கதையின் ஆரம்பத்திலும் கதையை தேர்ந்தெடுத்தவரின் ஒரு வரி விமர்சனம். கதை முடியும் இடத்தில் எழுத்தாளரைப்பற்றிய சிறிய அறிமுகமுமாக அழகாகத் தொகுத்திருக்கிறார்கள்.
நான் ரசித்த ஒருசில கதைகளைப் பற்றியது எனது இந்த பதிவு.
ஞானவிதைகள்:- உமா கல்யாணி
எழுந்து நடமாட முடியாத நிலையில் பசியுடன் இருக்கும் எசக்கியம்மா. நேரத்திற்கு சாப்பாடு போடாத மருமகள் ஆலம்மை. பசித்த வயிறு மாமியாரக தன் உரிமையை நிலைநாட்டச் சொல்லி தூண்ட, பாசமான மனது மகனின் மருமகளின் உறவையும், குடும்ப அமைதியும் நினைக்கிறது.
பசித்த வயிறு, பாசமான மனது தத்தமது வாத பிரதி வாதங்களை மாற்றி மாற்றி எடுத்துவைக்கிறது. ஒவ்வொரு முறை சாப்பாடு கேட்க நினைக்கும்போதும் மருமகள் கோபமாகபேசிவிடுவாளோ என்றும் இரவுப்பணிமுடிந்து தூங்கும் மகனை யோசித்தும் பேசாமலிருக்கிறாள்.
மீண்டும் இடும்பை கூர் வயிறு தூண்ட ஐயோ எசக்கி கேட்டு சண்டையாகிடுமோ என நாம் பதறும் அளவுக்கு வயதானவர்களின் பசியை (தீ)ப்பற்றி எரியச் செய்திருப்பார் (அப்பப்பா )உமா கல்யாணி.
பத்தும் பறக்க வைக்கும் பசியைத்தாண்டி பதினொன்றை யோசிக்கும் எசக்கி அதை செயல் படுத்த மருமகளின் உதவியை நாட ஆடிப்போன ஆலம்மை கண்ணீரை மறைத்தபடி அடுப்பு மூட்ட சிறிது நேரத்தில் தோசை வாசனை எசக்கி மூக்கை எட்டுகிறது. அப்பாடா!
ரசித்தது:- மகன்காதுக்கு கொண்டு சென்றுவிட்டால் தனக்கு ராஜ மரியாதையுடன் சாப்பாடு கிடைக்கும். ஆனால் பாசம் உறவற்று கடனே என்றிருக்கும். தான் வாழ்ந்து வயதாகிவிட்டவள் அவர்கள் வாழவேண்டியவர்கள் என்ற எசக்கியின் நினைப்பு. தாயின் பாசத்திற்குமுன் பசித்தவயிறு தோற்றுப்போகிறது.
ஆல (எசக்கிய)ம்மை வேண்டும்!
இனி எசக்கிக்கு சாப்பாடு ராஜ மரியாதையுடன் அல்ல அவளின் ஆசைப்படி ராசியாகிவிட்ட மருமகளின் அன்பான கவனிப்புடன்!!!
பதிப்பகம்:- வானதி
2001ல் வெவ்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகள் மாதத்திற்கு ஒன்றாகத்தேர்வு செய்யப்பட்ட 12 சிறுகதைகள் இந்த தொகுப்பில் உள்ளன. ஒவவொரு கதையின் ஆரம்பத்திலும் கதையை தேர்ந்தெடுத்தவரின் ஒரு வரி விமர்சனம். கதை முடியும் இடத்தில் எழுத்தாளரைப்பற்றிய சிறிய அறிமுகமுமாக அழகாகத் தொகுத்திருக்கிறார்கள்.
நான் ரசித்த ஒருசில கதைகளைப் பற்றியது எனது இந்த பதிவு.
ஞானவிதைகள்:- உமா கல்யாணி
எழுந்து நடமாட முடியாத நிலையில் பசியுடன் இருக்கும் எசக்கியம்மா. நேரத்திற்கு சாப்பாடு போடாத மருமகள் ஆலம்மை. பசித்த வயிறு மாமியாரக தன் உரிமையை நிலைநாட்டச் சொல்லி தூண்ட, பாசமான மனது மகனின் மருமகளின் உறவையும், குடும்ப அமைதியும் நினைக்கிறது.
பசித்த வயிறு, பாசமான மனது தத்தமது வாத பிரதி வாதங்களை மாற்றி மாற்றி எடுத்துவைக்கிறது. ஒவ்வொரு முறை சாப்பாடு கேட்க நினைக்கும்போதும் மருமகள் கோபமாகபேசிவிடுவாளோ என்றும் இரவுப்பணிமுடிந்து தூங்கும் மகனை யோசித்தும் பேசாமலிருக்கிறாள்.
மீண்டும் இடும்பை கூர் வயிறு தூண்ட ஐயோ எசக்கி கேட்டு சண்டையாகிடுமோ என நாம் பதறும் அளவுக்கு வயதானவர்களின் பசியை (தீ)ப்பற்றி எரியச் செய்திருப்பார் (அப்பப்பா )உமா கல்யாணி.
பத்தும் பறக்க வைக்கும் பசியைத்தாண்டி பதினொன்றை யோசிக்கும் எசக்கி அதை செயல் படுத்த மருமகளின் உதவியை நாட
ஆடிப்போன ஆலம்மை கண்ணீரை மறைத்தபடி அடுப்பு மூட்ட சிறிது நேரத்தில் தோசை வாசனை எசக்கி மூக்கை எட்டுகிறது. அப்பாடா!
ரசித்தது:- மகன்காதுக்கு கொண்டு சென்றுவிட்டால் தனக்கு ராஜ மரியாதையுடன் சாப்பாடு கிடைக்கும். ஆனால் பாசம் உறவற்று கடனே என்றிருக்கும். தான் வாழ்ந்து வயதாகிவிட்டவள் அவர்கள் வாழவேண்டியவர்கள் என்ற எசக்கியின் நினைப்பு. தாயின் பாசத்திற்குமுன் பசித்தவயிறு தோற்றுப்போகிறது.
ஆல (எசக்கிய)ம்மை வேண்டும்!
இனி எசக்கிக்கு சாப்பாடு ராஜ மரியாதையுடன் அல்ல அவளின் ஆசைப்படி ராசியாகிவிட்ட மருமகளின் அன்பான கவனிப்புடன்!!!
#நூல்விமார்சனம் --> https://wp.me/pcbJpq-JG