தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

கடல்புரத்தில்: நாவல் (Tamil Edition)
12 views
புதினம்/நாவல் > கடல்புரத்தில் - வண்ணநிலவன்

Comments Showing 1-3 of 3 (3 new)    post a comment »
dateUp arrow    newest »

Prem | 242 comments Mod
நூறு பக்கங்கள் கொண்ட "கடல்புரத்தில்" பற்றி யார் யார் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்ற தேடி வாசித்த கட்டுரைகள், கேட்ட காணொலிகள் பற்றிய தொகுப்பு இந்த இழை.

சித்திரவீதிக்காரன் என்ற தளத்தில் வந்த "வண்ணநிலவனுடன் கடல்புரத்தில்…." என்ற கட்டுரை. நாவலைக் குறித்த சா.கந்தசாமியின் பகிர்வு இந்த பதிவில் உண்டு.

* வாழ்க்கையின் முரண்பாடான அம்சங்களை மிகவும் யதார்த்தமாகவும் தீவிரமாக எதிர்க்க வேண்டிய அம்சங்களை மென்மையாகவும் சாத்தியமே என ஏற்றுக்கொள்ளும்படி சொல்லுகிறது இந்த நாவல். விஷயத்தைவிட, சொல்லும் முறையில் அபூர்வமான கலைத்தன்மை பூரணம் பெறுகிறது. இந்த நாவலின் சிறப்பு அம்சமே இதன் பாஷைதான். மென்மையும் குளுமையும் உயிர்த் துடிப்பும் கொண்ட பாஷை. எதையும் சாதிக்கவல்ல பாஷை. இந்த நாவலையும் ஸ்தாபிக்கிறது.

இன்னும் பல காலத்துக்குக் கடல்புரத்தில் சிறந்த நாவலாகவே இருக்கும்.

-சா.கந்தசாமி.

* வண்ணநிலவனின் கடல்புரத்தில் வாசித்துவிட்டு எங்க அப்பா பொக்கிஷம் என்றார். எங்க அம்மாவுக்கு இந்நாவலில் வரும் சிறுகதாபாத்திரமான டாரதி மூலம் அவருடைய ஆசிரியை டாரதி ஞாபகம் வந்துவிட்டது. ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் தனியொரு பதிவே எழுதலாம். அந்தளவு ஒவ்வொருவரும் நம் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுகிறார்கள். வண்ணநிலவன் முன்னுரையில் சொல்வது போல ‘எல்லோரும் உயர்வானவர்கள்தான்’ என்ற எண்ணம் வாசித்ததும் நமக்கும் தோன்றுகிறது. பார்க்கப் பார்க்க சலிக்காத விசயங்களில் கடலும் ஒன்று. அதுபோல, வாசிக்க வாசிக்க சலிக்காத நூல்களில் ‘கடல்புரத்தில்’ நாவலும் ஒன்று.


Prem | 242 comments Mod
பூ. கோ. சரவணன் எழுதிய "கடல்புரத்தில் – ஆழியினும் ஆழமானது!" என்ற கட்டுரை.

* கடல் பகுதிகளில் வாழும் கிறிஸ்துவர்களின் மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் அடிக்கடி வண்ணநிலவனின் நடை இயேசுவின் மலைச்சொற்பொழிவை நினைவூட்டும் அளவுக்குக் கவித்துவமும், அன்பும் மிகுந்ததாக ஊற்றெடுக்கிறது. மணப்பாட்டு மக்களின் வாழ்க்கையை, பிரியத்தைக் கதையாகச் சொல்ல வந்த வண்ணநிலவன் வலிந்து எதையும் கதையில் திணிப்பதாக நமக்குத் தோன்றுவதில்லை


Prem | 242 comments Mod
"எஸ்தர் கதை உருவான விதம்" என்ற தலைப்பில் வண்ணநிலவனின் இக்கட்டுரை, எழுத்தின்பால் அவருக்கு ஏற்பட்ட ஆர்வம், பிரபஞ்சன், வண்ணதாசன் என்று சமகால எழுத்தாளர்களுடன் இருந்த நட்பு பற்றியும், கடல்புரத்தில் கணையாழியில் தொடராக வந்த விடயங்களையும் கூறுகிறார். அந்த காலத்தில் அவர் மேற்கொண்ட ஒரு பயணத்தில் கண்ட காட்சி எப்படி அவரை எஸ்தர், மிருகம் என்ற சிறுகதைகள் எழுத தூண்டியது என்பதை விளக்குகிறார்.

* பாண்டிச்சேரிக்கு என் அறைக்கு வந்த பின்பும் அந்தக் கருத்து மெலிந்த மனிதர்களின் முகங்களும் , வண்டிகளை இழுத்துச் சென்ற மாடுகளின் கண்ணீர்க் கறை படிந்த கண்களும் என் நினைவில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன . சொந்த ஊரில் வாழ வழியில்லாமல் போவதென்பது எவ்வளவு கொடிய துயரம்.


back to top

64602

தமிழ் புத்தகங்கள் (Tamil Books)

unread topics | mark unread