டேய், சூரியன் அணையாத பிரிட்டிஷ் சர்க்காருக்கு அதுக்க வேலைக்காரன பாதுக்காக்குத சக்தி இருக்கா இல்லியாண்ணுட்டு பாத்திருவோம்” என்றார் அப்பா. தலையாரி திக்பிரமை பிடித்துவிட்டார். அந்த கோணத்தில் அவர் யோசித்ததே இல்லை. அங்கே இருக்கும் அந்தக் கரிய மனிதன் ஒரு மாபெரும் வெள்ளை சாம்ராஜ்யத்தின் பிரதிநிதி! பீரங்கிகள், தொப்பிகள், ரைஃபிள்கள், குதிரைகள், முத்திரையிட்ட காகிதங்கள்... அவர் மேலே பேசவில்லை. மீசையைக் கோதியபடி கொஞ்ச நேரம் நின்றுவிட்டு திரும்பிச் சென்றுவிட்டார். போகும்போது ஒருமுறை அப்பாவை திரும்பிப்பார்த்தார்.