அப்படியே அமர்ந்து கொண்டு சோற்றை உருட்டினேன். அதை வாயில் வைக்கும்போது அதட்டலுக்காக காதும் உதைக்காக முதுகும் துடித்துக் காத்திருந்தன. முதல் கவளத்தை உண்டு விட்டு ஏனென்று தெரியாமல் எழப்போனேன். சுவாமி “தின்னெடே” என்றார். மீண்டும் அமர்ந்துகொண்டு கொதிக்க கொதிக்க அள்ளி வாய்க்குள் போட்டுக்கொண்டே இருந்தேன்.