நிர்வாகத்தில் ஈடுபட ஆரம்பிக்கும் அதிகாரி முதலில் அதிகாரத்தின் ருசியை அறிந்துகொள்கிறான். கூடவே அது எப்படி உருவாகிறது என்றும் கண்டுகொள்கிறான். மேலும் மேலும் அதிகாரத்துக்காக அவன் மனம் ஏங்குகிறது. அதற்காக தன்னை மாற்றிக்கொண்டே இருக்கிறான். சில வருடங்களில் அவன் அதிகார அமைப்பில் உள்ள பிற அனைவரையும் போல அச்சு அசலாக மாறிவிடுகிறான். அவன் கொண்டுவந்த கனவுகள் லட்சியவாதங்கள் எல்லாம் எங்கோ மறைகின்றன. மொழி, பாவனைகள், நம்பிக்கைகள் மட்டுமல்ல முகமும்கூட பிறரைப்போல ஆகிவிடுகிறது.