நாடார்கள் முக்காலிகளில் உட்காரலாம். அதுதான் வழக்கம். சீனியர் நாடார் வக்கீல்கள்கூட அப்படித்தான் உட்கார்வது. எம்.கெ.செல்லப்பன் கூட இன்று வரை நாற்காலியில் அமர்ந்ததில்லை... ஒரு நிமிடத்தில் ரத்தமெல்லாம் தலைக்கு ஏற நேசமணி எழுந்து கத்த ஆரம்பித்தார். “லே இங்க பாவப்பெட்டவனுக்கு இருக்க எடமில்லேண்ணா பின்ன நீதி எங்கலே கிட்டும்? நாயிப்பயலுவளே...” என்று கூவியபடி முக்காலிகளை தூக்கிக்கொண்டு வந்து நீதிமன்ற முற்றத்தில் வீசினார். ஒவ்வொரு அறையாகப் போய் முக்காலிகளை தூக்கிக் கொண்டு வந்து வீசிக்கொண்டே இருந்தார்.