More on this book
Community
Kindle Notes & Highlights
அமர்ந்து கொண்டபோது நாற்காலி தரையின் சிமிட்டித்தளத்தில் இருந்த பள்ளத்தில் ஒரு கால் சிக்கி சற்று திடுக்கிட்டது.
உடம்பில் வயிறுதவிர வேறு உறுப்பிருக்கிறது என்ற நினைப்பே இல்லாத வாழ்க்கை.
கோபமே அடங்காத துர்தேவதை மாதிரி வயிறு பொங்கிக்கொண்டே இருக்கும். கூரைக்கு பிடித்த தீ போன்றது பசி என்று என் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதில் கைக்குக் கிடைத்ததை எல்லாம் அள்ளிப் போட்டு அணைக்க வேண்டியதுதான். அது நல்லதா கெட்டதா என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. பசியை விட வேறு எதுவும் கொடியது அல்ல.
ஆனால் புனிதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறது. அதற்கு நம்பமுடியாத அளவுக்கு ஆற்றல் உண்டு. என்னுடைய இத்தனைநாள் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று அது. மனிதன் கள்ளமற்று இருக்கும்போது கடவுள் அவரது இரக்கமில்லாத விதிகளை எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை அவருக்கு. அந்த சக்தியால்தான் அப்பா அவ்வளவுதூரம் சென்றார்.
நாடார்கள் முக்காலிகளில் உட்காரலாம். அதுதான் வழக்கம். சீனியர் நாடார் வக்கீல்கள்கூட அப்படித்தான் உட்கார்வது. எம்.கெ.செல்லப்பன் கூட இன்று வரை நாற்காலியில் அமர்ந்ததில்லை... ஒரு நிமிடத்தில் ரத்தமெல்லாம் தலைக்கு ஏற நேசமணி எழுந்து கத்த ஆரம்பித்தார். “லே இங்க பாவப்பெட்டவனுக்கு இருக்க எடமில்லேண்ணா பின்ன நீதி எங்கலே கிட்டும்? நாயிப்பயலுவளே...” என்று கூவியபடி முக்காலிகளை தூக்கிக்கொண்டு வந்து நீதிமன்ற முற்றத்தில் வீசினார். ஒவ்வொரு அறையாகப் போய் முக்காலிகளை தூக்கிக் கொண்டு வந்து வீசிக்கொண்டே இருந்தார்.
டேய், சூரியன் அணையாத பிரிட்டிஷ் சர்க்காருக்கு அதுக்க வேலைக்காரன பாதுக்காக்குத சக்தி இருக்கா இல்லியாண்ணுட்டு பாத்திருவோம்” என்றார் அப்பா. தலையாரி திக்பிரமை பிடித்துவிட்டார். அந்த கோணத்தில் அவர் யோசித்ததே இல்லை. அங்கே இருக்கும் அந்தக் கரிய மனிதன் ஒரு மாபெரும் வெள்ளை சாம்ராஜ்யத்தின் பிரதிநிதி! பீரங்கிகள், தொப்பிகள், ரைஃபிள்கள், குதிரைகள், முத்திரையிட்ட காகிதங்கள்... அவர் மேலே பேசவில்லை. மீசையைக் கோதியபடி கொஞ்ச நேரம் நின்றுவிட்டு திரும்பிச் சென்றுவிட்டார். போகும்போது ஒருமுறை அப்பாவை திரும்பிப்பார்த்தார்.
எண்ணங்கள்மேல் மணல்சரிந்து மூட ஆரம்பிக்க நான் என்னை இழப்பதன் கடைசி புல்நுனியில் நின்று மேலே தாவ உடலால் வெட்டவெளியை துழாவிக்கொண்டிருந்தபோது மீண்டும் அழைப்பு.
“உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேயே வீக்கான மிருகம். மத்தமிருகங்கள்லாம் நோயையும் வலியையும் பொறுத்துக்கறதில இருக்கிற கம்பீரத்தைப்பாத்தா கண்ணுல தண்ணி வந்திடும். உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது. துடிக்காது. கண்மட்டும் நல்லா சுருங்கி இருக்கும். உடம்பு அங்கங்க அதிரும். யானை சம்மதிச்சா அதுக்கு மயக்கமருந்தே குடுக்காம சர்ஜரி பண்ணலாம். அந்த அளவுக்கு பொறுமையா ஒத்துக்கிட்டு நிற்கும். என்ன ஒரு பீயிங். கடவுள் அவரோட நல்ல கிரியேட்டிவ் மூடிலே படைச்சிருக்கார்...” அவர் யானையைப்பற்றிய பேச்சை எப்படியாவது நாலாவது வரியில் உள்ளே கொண்டு வந்துவிடுவார் என பலர் சொல்லி கேள்விப்பட்டிருந்தேன், எனக்கு புன்னகை வந்தது.
...more
“எல்லா புழுவும் கைக்குழந்தைதான். நடக்க முடியாது. பறக்க முடியாது. அதுபாட்டுக்கு தவழ்ந்துண்டு இருக்கறது. அதுக்கு தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான், சாப்புடறது. தின்னுண்டே இருக்கும். சின்னப்புள்ளைங்ககூட அப்டித்தான்... ஒரு கைக்குழந்தை சாப்பிடற சாப்பாட்டை அதோட எடையோட கம்பேர் பண்ணினா நீங்க தினம் முப்பது லிட்டர் பால்குடிக்கணும்...” என்றார் டாக்டர் கே. “அதுக்கு அப்டி ஆர்டர். சட்டுபுட்டுன்னு அகப்பட்டத தின்னு பெரிசாகிற வழியப்பாருன்னு...” புன்னகைத்து “கிறுக்கு ஃபிலாசபின்னு தோணறதா?” என்றார். “இல்லை” என்றேன். “வெல்.” அன்று முழுக்க அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரைப்போன்ற உரையாடல் நிபுணர் ஒருவரை நான் பார்த்ததே
...more
ஆள் மேலே ஏறியதும் தன் உயரத்தை அந்த ஆளின் உயரத்துடன் சேர்த்து கணக்கிட்டுக்கொள்ளும் யானையின் நுட்பத்தை ஒவ்வொருமுறையும் பிரமிக்காமலிருக்க முடியவில்லை. டாக்டர்
அப்படியே அமர்ந்து கொண்டு சோற்றை உருட்டினேன். அதை வாயில் வைக்கும்போது அதட்டலுக்காக காதும் உதைக்காக முதுகும் துடித்துக் காத்திருந்தன. முதல் கவளத்தை உண்டு விட்டு ஏனென்று தெரியாமல் எழப்போனேன். சுவாமி “தின்னெடே” என்றார். மீண்டும் அமர்ந்துகொண்டு கொதிக்க கொதிக்க அள்ளி வாய்க்குள் போட்டுக்கொண்டே இருந்தேன்.
நிர்வாகத்தில் ஈடுபட ஆரம்பிக்கும் அதிகாரி முதலில் அதிகாரத்தின் ருசியை அறிந்துகொள்கிறான். கூடவே அது எப்படி உருவாகிறது என்றும் கண்டுகொள்கிறான். மேலும் மேலும் அதிகாரத்துக்காக அவன் மனம் ஏங்குகிறது. அதற்காக தன்னை மாற்றிக்கொண்டே இருக்கிறான். சில வருடங்களில் அவன் அதிகார அமைப்பில் உள்ள பிற அனைவரையும் போல அச்சு அசலாக மாறிவிடுகிறான். அவன் கொண்டுவந்த கனவுகள் லட்சியவாதங்கள் எல்லாம் எங்கோ மறைகின்றன. மொழி, பாவனைகள், நம்பிக்கைகள் மட்டுமல்ல முகமும்கூட பிறரைப்போல ஆகிவிடுகிறது.
“எவ்ளவு பணம் போச்சு” என்றார். “எம்பது ரூபா சார்.” “பாவம்” என்றார். “பரவால்லை” என்றேன். “நான் அவனைச் சொன்னேன், அவ்ளவு ஒழைச்சிருக்கான்... ஒருநாள் கூலியாவது தேறியிருக்கணும்ல?”
கைகழுவுவதற்கு சாப்பிடுவதைவிட பெரிய தட்டு. அவள் சென்றதும் நான் அந்தத் தட்டை மெல்ல தொட்டுப் பார்த்தேன். அந்த வெண்மை நிறம் முட்டை ஓடு போலிருந்தது.
அந்த அறையில் இருந்து ஒரு நர்ஸம்மா வந்து “லே இந்நாலே... சாயிப்பு குடுத்தாரு” என்று ஒரு ரொட்டியை எனக்கு கொடுத்துச் சென்றாள். நான் நான்குபக்கமும் பார்த்துவிட்டு அதை வாங்கிக்கொண்டு ஓரமாகச் சென்று சுவர் நோக்கி அமர்ந்து வேகமாக தின்ன ஆரம்பித்தேன். பாதி ரொட்டி முடிந்தபிறகுதான் அதன் ருசியே எனக்கு தெரிய ஆரம்பித்தது. தரையில் உதிர்ந்து கிடந்த துணுக்குகளையும் பொறுக்கி வாயில் போட்டேன். அவற்றில் ஒன்றிரண்டு துணுக்குகள் எறும்புகள் என வாயில் போட்ட பிறகே தெரிந்தது.
மத்துறு தயிர் என வந்து சென்று இடை தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும் பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ?
ராஜம் பேராசிரியர் மனசிலே இருக்கிற எடத்திலே இனி ஒரு மனுஷனும் ஏறி இருக்க முடியாது. அங்க அவருக்க சொந்த பிள்ளைக கூட இல்ல. ஏசு இப்பம் பூமிக்கு வந்தாருன்னு வைங்க, சட்டுன்னு ‘இந்தாலே ராஜம் இங்க வா’ன்னு அவரைத்தான் முதல்ல கூப்பிட்டு அறிமுகம் செஞ்சு வைப்பாரு..”
“ஆவி உண்டு என்னும் ஈது உண்டு, உன் ஆருயிர் சேவகன் திருவுரு தீண்ட தீய்ந்திலா பூ இலை தளிர் இலை பொரிந்து வெந்திலா கா இலை, கொடி இலை, நெடிய கான் எலாம்”
“கோட்டாறு குமாரபிள்ளைய பத்தி சொல்லியிருக்கேனா?” என்றார். “ஆம்” என்றேன். அது அவருக்கு ஒரு பொருட்டாகப் படவில்லை. அவர் ஏற்கனவே சொல்ல ஆரம்பித்துவிட்டிருந்தார். “அண்ணைக்கெல்லாம் டிவிடி ஸ்கூலிலே ஒரு அட்மிஷன்னாக்க சாதாரணப்பட்ட விசயம் இல்லை. பலபேரு ஃபீஸு குடுக்கமாட்டாங்கன்னு ஆரம்பத்திலேயே ஃபீஸ வாங்கிடுவாங்க. எனக்க
அந்த வகுப்புகள் வழியாக அவர் மனம் கடந்து செல்வதை உணர முடிந்தது. “எல்லாம் சொல்லுவாரு. எலக்கணம், காப்பியம், சாஸ்திரம். கூடவே அவருக்க அனுபவங்கள சொல்லிக்குடுப்பாரு. கருணை இல்லாம கவிதை புரியாதுடான்னு சொல்லுவாரு. சொல்லிச்சொல்லி மனச நெறைய வைச்சிருவாரு...” சட்டென்று குரல் கிரீச்சிட்டு வழுக்கியது. “இருக்கதெல்லாம், அடைஞ்சதெல்லாம் என் தெய்வம் போட்ட பிச்சையல்லோ... வாங்குறதுக்கெல்லாம் என்னமாம் திருப்பிக் குடுக்கோம். குருவுக்கு என்ன குடுக்கோம்? வேறெ என்ன, இந்தா இங்க நெஞ்சுக்குள்ள கோயில கெட்டி வச்சிருக்கோமே. அதுதான். எங்க இருந்தாலும் இப்ப இந்த வார்த்தைய மகராஜன் கேக்காமயா இருப்பாரு? இந்த ஏழை சங்கு உருகி அவரை
...more
மீண்டும் கிளம்பும்போது பேராசிரியர் சொன்னார். “ஒருமாசம் கழிஞ்சு ஒருநாளு அடுக்களையிலே போயி காப்பி கொண்டுவரச் சொன்னாரு. நானும் அவரு சொன்னதனால போனேன். அவரு ரொம்ப ஆசாரமான ஆளாக்கும். நாஞ்சிநாட்டு பிள்ளமாரு இண்ணைக்குள்ளது மாதிரி இல்ல அப்ப. அவ வீட்டு ஆச்சி அதுக்கும் மேலே. அது எனக்கும் தெரியும். ஆனா நான் சொன்ன சொல்ல அப்டியே செய்யுறவன். ஆச்சி கோவமா முன்வாசலுக்கு வந்து ‘என்ன சொல்லி அனுப்பினியோ? நாடாப்பய அடுக்களையிலே கேறுதானே’ன்னு கேட்டா. அவரு நிதானமா ‘அவனுக்கு இல்லாத எடம்னு ஒண்ணு எனக்க கிட்ட இல்ல’ன்னு சொன்னாரு. ஆச்சி அப்டியே நின்னா. என்னன்னு புரிஞ்சுதோ என்னை ஒரு பார்வை பாத்தா. சட்டுண்ணு உள்ள போயிட்டா.
...more
“ஊட்டி தமிழ்நாட்டுடன் இணைந்து ஒற்றுமையாக இருக்க முடியும் என்றால், தமிழ்நாடு இந்தியாவுடன் இருக்க முடியும் என்றால், ஏன் உலகம் ஒன்றாக இருக்க முடியாது?” என்றார். அந்தக் கேள்வியிலிருந்த ஏதோ ஒன்றால் நான் புன்னகை செய்தேன். ஊட்டியின் அந்த மலைச்சாலையில் ரிஷிகளைப்போல சிந்திக்கத்தோன்றும் போலும். “நீ சிரிக்கிறாய். இதை கிறுக்குத்தனம் என்கிறாய். நான் உலகின் இருநூற்று ஐம்பது நாடுகளில் பல்லாயிரம் பேர் இந்தச் சிரிப்பு சிரிப்பதை கவனித்திருக்கிறேன்... நூறுவருடங்களுக்கு முன் கறுப்பனும் வெள்ளையனும் சமம் என்று சொன்னபோது இப்படித்தான் சிரித்திருப்பார்கள். இருநூறுவருடம் முன்பு மனிதனை அடிமையாக விற்பதும் வாங்குவதும்
...more