More on this book
Kindle Notes & Highlights
சாதி என்பது குரூரமான யதார்த்தம். சமூகம் என்பதே இங்கு சாதியின் அடுக்குகளாகத்தான் இருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்பதே வேறு விஷயம். ஆனாலும், இதைத் தவிர்க்க முடியவில்லை. இங்கே தனி நபர்கள் என்று யாரும் இல்லை. எல்லார் மீதும், விரும்பியோ விரும்பாமலோ சாதி போர்த்தப்பட்டிருக்கிறது.
மக்கள் ஒரு கட்டத்தில் தங்களது கலாசாரத்தின் பிரதிநிதியாக கடவுளை ஆக்குவார்கள்.
மிகப்பெரிய ஆன்மிக மையமாக விளங்குகிற கோயிலை அரசு அதிகாரம் தனக்கென எடுத்துக்கொள்கிறது. பழநி கோயிலில் முன்பு பூஜை செய்தது பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர். ஆனால், திருமலை நாயக்கர் காலத்தில் தளவாயாக இருந்த ராமப்பையர் இன்னொரு சமூகத்தினர் கையிலிருந்து திருநீறு வாங்குவதை விரும்பவில்லை. இதையடுத்து அங்கு பூஜை செய்யும் உரிமை பிராமணர்களுக்கு மாறுகிறது. இதே மாதிரி, கதைப் பாடல்களின்படி பார்த்தால் ராமேஸ்வரம் கோயிலிலும் பூஜை செய்திருப்பது பிற்படுத்தப்பட்ட சமூகம்தான். பிறகு, அங்கும் மாற்றப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரம் உள்ளே நுழைய நுழைய எளிய மக்கள், உணர்வு ரீதியாக அந்தக் கோயிலில் இருந்து விலகிவிடுகிறார்கள்.
முதலில் சாதிய மறுப்பைக் கோயில் கருவறைகளில் இருந்து துவக்குங்கள். பிறப்பு வழிப்பட்ட மேலாண்மையைக் கோயில்களின் மூலமாக தக்க வைத்துக்கொள்கிற வரைக்கும் ஆன்மிக அதிகாரத்தையும், அதன் மூலம் அரசியல் அதிகாரத்தையும் உயர்சாதி தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. எனவே மேல், கீழ் என்கிற அடுக்கு முறையை நியாயப்படுத்துகிற எல்லாமே பிராமணியம்தான். அது ஒரு ஒடுக்குமுறைக் கருத்தியல், அது பிராமணர்கள் இல்லாத இடத்திலும் இருக்கிறது. எப்போது பிற்படுத்தப்பட்ட ஒருவர், தாழ்த்தப்பட்டவரை சாதியின் பெயரால் ஒடுக்குகிறாரோ, அந்த ஒடுக்குமுறை உறவுக்குப் பெயர் பிராமணியம் என்று நாம் சொல்கிறோம். ஏனென்றால் இதைக் கற்றுக் கொடுத்தது அவர்கள்தான்.
...more
Sugan liked this
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்துக் குழந்தைகள் பனை ஓலைகளில் காற்றாடி செய்வார்கள். பூவரசு இலையை வைத்து ஊதல் செய்வார்கள். சிறு பொருளையேனும் தானே ஆக்கிக் கொள்கிற அந்தக் கலாச்சாரம் இப்போது அடிபட்டுப் போய்விட்டது. இப்போது எந்தக் குழந்தையும் தானே ஆக்கிக் கொள்வதில்லை. எல்லாம் கடைகளில் வாங்கிக் கொடுக்கப்பட்டு ‘ஆக்கம்’ என்கிற சுயமான உற்பத்தி உணர்வு அடிபட்டுப் போய்விடுகின்றது.
பாரம்பரியமாக நாம் உப்பைப் பயன்படுத்துவதை எதிர்க்கிற விதத்தில் ‘நிறுத்து’ என்று அதிகாரத் தொனியில் தொலைக்காட்சி விளம்பரம் வருகிறது! அதில் வன்முறை இல்லையா? ‘உங்கள் மேனியின் சிவப்பழகு’ என்று சொல்வதில் வன்முறை இல்லையா? கருப்பாக இருக்கும் பெருவாரியான மக்களை அழகில்லை என்று தாழ்த்திவிட முடியுமா? சிவப்பு மட்டும்தான் அழகா? ஆயுத வன்முறையைவிட இது கொடூரமான வன்முறை இல்லையா? அரசியல் ஒடுக்குமுறையிலிருந்துகூட விடுபட்டு விடலாம். இந்தப் பண்பாட்டு ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவது கஷ்டம்.
Sugan liked this