More on this book
Kindle Notes & Highlights
இருவரும் ஒரே நேரம் கண்கள் சந்திக்க புன்னகைத்துக் கொண்டோம். புன்னகைக்கும் போது அவள் கண்களும் அது மூக்கின் வளைவை சந்திக்கும் இடமும் குறும்பாக சுருங்கி விரிந்தது. பெரும் போதை தரும் பானத்தின் முதல் மிடறைப் போல அதன் குறுகுறுப்பு தலைக்குள் ஏறியது. அவள் பேரழகி.
நான் அன்பை தேடவில்லை, எப்போதும் எனக்கு சொந்தமாக, என் இச்சைக்கு வழங்கும் ஒருவள், அழகாக இருப்பது, என் நுண்ணுணர்வை கண்டுகொள்ளுவது இவைதான் அவள் செய்யவேண்டியது, என் பின்னால் எப்போதும் தொடரும் ஒருத்தி. நான் இல்லாமல் ஒரு கணமும் அவள் முழுமை கொள்ளக் கூடாது, நிறைவடையக் கூடாது. அப்படி நிறைவடைவதை என் தோல்வியாக மட்டுமே என்னால் காண இயலும்.
நான் “கீழே. தென்னிந்தியா” என்றேன். அவர் பலமாக தலையாட்டினார். பின் ஆழ்ந்து அமர்ந்துவிட்டு சிறிது நேரம் கழித்து “டெல்லி?” என்றார். அவருக்கு அவ்வளவுதான் தெற்கு வரமுடியும் என்று தெரிந்து. நானும் சற்று சமரசம் செய்துகொண்டு “ம்ம்ம்” என்று ஆமோதித்தேன்.
ஓநாயின் பற்கள் போல குளிர் என் கைகளிலும் கால்களிலும் பற்றி பதிந்தது.