More on this book
Community
Kindle Notes & Highlights
அப்படிப் பேசும் அவர்கள் வார்த்தைகளுக்கும் வின்சென்ட் பேசும் சொற்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? சந்தர்ப்பத்தையும் கேட்பவரின் மனநிலையையும் பொறுத்து அது வடிவம் பெறுகிறது. அப்படிப் பார்த்தால் அவதாரம்
எடுத்து வந்தவர்கள் பெரிய பெரிய வார்த்தைகளைப் பேசுவதே இல்லை. அவர்களுடைய எளிய சொற்கள் தரும் மகத்தான பொருள்களைத்தானே பாமர மக்கள் கிரகித்துக்கொள்கிறார்கள்? ஒலிகளின் வலிமை வெடிப்பது, அவை புகும் மனங்களில்தானே? ஆனாலும், கடவுள் எந்த வடிவத்தில் வருவார் என்பதை அறிந்தவர்கள் யார்?
Arunaa Ramesh liked this
உறவின் கடைசி இழை ஒரு
பார்வைக்கு மட்டுமல்ல சொல்லாத வார்த்தைக்கும் கூட முறிந்துவிடும் என்பதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.
Arunaa Ramesh liked this
பணம் நம்மை ஆட்டிவைக்கும் என்ற பேச்சு பொய்யல்ல. அதற்கும் ஒரு இயல்பு, பலம் இருக்குமோ என்னமோ. குறைவாக இருக்கும்போது நம் கட்டுப்பாட்டிலிருந்து, அதிகமானதும் அதன் வலு பெருகி நம்மையே ஆட்டிப் படைக்கும் என்று தோன்றுகிறது.
அலுவலகத்திற்குச் சென்று வருபவர்களைப்போல நான் நாள் முழுவதும் வீட்டிலிருந்து வெளியே இருந்துகொண்டு நேரத்தை வீணடிக்கும் வேலையை சிரத்தையுடன் செய்கிறேன்.