More on this book
Community
Kindle Notes & Highlights
பிரபஞ்சத்திடமிருந்து மனம் பெறும் அனுபவம் ஒன்றுதான். புலன்களே அவற்றை வேறு வேறாக காட்டுகின்றன.
தன்மீது அதிருப்தியும் அருவருப்பும் கொண்டவர்கள் மனிதர்கள். அவர்கள் தங்களையே விரும்ப விழைகிறார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிக் கொண்ட மாயவித்தைகள்தான் கலையும் காவியமும். அவற்றின் மூர்த்திகரணமே இந்தப் பேராலயம்.”
பிரபஞ்ச சத்தியம் ஒன்றுதான். நமது அனுபவமே அதை இரண்டாக்குகிறது.
“நிறுவப்படும்தோறும் உண்மை பொய்யாகிறது. நிறுவப்படாதபோது உண்மையை யாரும் அறிவதும் இல்லை” என்றார்.
இந்த மண்ணில் கால்பதிந்துள்ள எவரும் தனக்குத்தானேகூட, சில கணங்களுக்குக் கூட உண்மையாக வாழ முடியாது.
ஒவ்வோர் அடையாளமும் மனிதனுக்கு மனிதனே போர்த்திவிட்ட பொய். சகல நம்பிக்கைகளும் மனிதன் புகுந்துகொள்ளும் பொய்.