ஏன் எனில், திராவிடரின் தன்மானம், அறிவு, மனிதத்தன்மை இன்று நேற்றல் லாமல் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்டவைகளாகும். திராவிட அரசர்கள் மூவேந்தர்கள், நான்கு வேந்தர்கள், அய்வேந்தர்கள் காலத்திலேயே இந்த வேந்தர்கள் ஆரிய அடிமைகளாக இருந்தவர்கள். அவர்களது ஆரிய அடிமை ஆட்சியில் நாம் இருந்தவர்கள் என்பது மாத்திர மல்லாமல் அவர்கள் சந்ததியார்கள் என்றும் பெருமை பேசிக் கொள்ளு பவர்களா யிருக்கிறோம். இதன் இழிவை நம்மில் வயது வந்து வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் சிறிதும் உண ரார்கள். ஆகவே நமது வேலை அடியோடு புதிய வேலையாக இருக்கிறது. அதுவும் புரட்சி வேலையாக இருக்கிறது.

