இந்துக் குடும்பங்களில் கணவர் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ள விருப்பமில்லாத பெண்மக்களுக்கு தங்கள் கணவர் பயன்படுத்தி வந்த சொத்துகளின் உரிமை கொடுக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்கிறது. 11.இந்து சமூகம் என்று சொல்லப்படும் குடும்பச் சொத்துகளில் பெண் மக்களுக்கும், ஆண் மக்களுக்கும் ஒத்த சொத்துரிமை கொடுக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்கிறது. 12.நாட்டில் ஜாதி மத வேற்றுமைகளிருந்து வரும் வரை ஒவ்வொரு ஜாதி மதத்தினருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டுமென்று இம்மகாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.

