ஏழை ஜனங்களையும் சரீரத்தால் பாடுபடும் தொழிலாளிகளையும் கீழ் ஜாதி என்றும், தொடக்கூடாதவர்கள் என்றும் கொடுமைப்படுத்தி தாழ்த்தி வைத்திருக்கும் ஜனங்களையும் கவனித்து, அவர்களை அவர்களுடைய கஷ்டங்களில் இருந்து விடுதலை செய்ய முடியாத அரசியல் திட்டம் யாருக்கு வேண்டும்? என்று கேட்கின்றேன். மேல் ஜாதிக்காரனுக்கும் முதலாளிகளுக்குமல்லவா அது பயன்படும். தொழிலாளிகளுக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பது தான் அரசியல் திட்டத்தில் ஒரு கொள்கையாய் இருக்கின்றதே தவிர, முதலாளி எவ்வளவு லாபத்திற்கு மேல் சம்பாதிக்கக் கூடாது என்பதாக யாராவது திட்டம் போடுகிறார்களா? பாருங்கள்.

