இந்து சமூகத்திற்குச் சம்பந்தப்பட்டதென்று சொல்லப்படுகிற கோயில், குளம், சத்திரம் முதலிய எல்லா விடங்களிலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர் களென்று சொல்லப்படுகிற எல்லா மக்களுக்காவது சம உரிமை கொடுக்கப்பட வேண்டுமென்று இம்மகாநாடு முடிவு செய்கிறது. 8.கோயில்களில் கடவுளை வழிபடுகிறதற்கு இடையில் தரகர்கள் வேண்டியதில்லையென்றும், ஒவ்வொருவருக்கும் நேராகவே கடவுளை வந்தனை, வழிபாடு செய்து, பூசனை புரிவதற்கு உரிமையுண்டென்றும், அதனை இது முதலே ஒவ்வொருவரும் நடவடிக்கைக்குக் கொண்டு வர வேண்டுமென்றும் இம்மகாநாடு முடிவு செய்கிறது.

