1000 முத்தையா செட்டியார்களும் சரி, ஒரு சங்கராச்சாரிப் பார்ப்பானும் சரி. நாளை எல்லோருக்கும் நிலம் பொதுவானது என்று பிரித்துக் கொடுத்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். வருஷம்தோறும் சிரார்த்தம், திவசம் என்பவைகளின் பேரால் பார்ப்பான் கறந்துகொண்டுதானே இருப்பான்? கடவுளின் பெயரால் அர்ச்சகப் பார்ப்பான் சுரண்டிக்கொண்டுதானே இருப்பான். எனவே, இந்த நாட்டுப் பேதங்கள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம் எல்லாம் கடவுள், மதம், சாஸ்திரம் என்பவைகளும், அவைகளின் பேரால் வாழுகிற கூட்டமும்தான் என்பதை உணர்ந்து இவைகளை ஒழித்தால்தான், எல்லார்க்கும் எல்லாமாய் என்று சொல்லுவார்களே அந்த நிலைமை இங்கு ஏற்படும்.

