பிராமணர் தமிழரானால் - திராவிடரானால் பிராமண ஹோட்டல்களில் தமிழர்கள் எல்லாம் வேற்றுமையின்றி ஒன்றாக இருந்து சிற்றுண்டியருந்தும் போது பிராமணர்கள் மட்டும் தனியிடத்திலிருந்து உண்பதேன்? பிராமணர் தமிழரானால், தமிழ் நூல்களன்றோ அவர்களுக்கு முதல் நூல்களாக இருக்க வேண்டும். வேதத்தை பிராமணர்கள் முதல் நூலாகவும் ஆதாரமாகவும் கொள்வதேன்? பிராமணர் தமிழரானால் சமஸ்கிருதத்துக்கு அவர்கள் உயர்வு கற்பிப்பதேன்? தமிழ் நூல்கள் எல்லாம் வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவைகளே எனப் புனைந்து கூறுவதேன்? பிராமணர் தமிழர்களானால் அவர்கட்கு மட்டும் தனி சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்கள் ஸ்தாபித்திருப்பதேன்? அப்பள்ளிக்கூடங்களில் தமிழர்கட்கு
பிராமணர் தமிழரானால் - திராவிடரானால் பிராமண ஹோட்டல்களில் தமிழர்கள் எல்லாம் வேற்றுமையின்றி ஒன்றாக இருந்து சிற்றுண்டியருந்தும் போது பிராமணர்கள் மட்டும் தனியிடத்திலிருந்து உண்பதேன்? பிராமணர் தமிழரானால், தமிழ் நூல்களன்றோ அவர்களுக்கு முதல் நூல்களாக இருக்க வேண்டும். வேதத்தை பிராமணர்கள் முதல் நூலாகவும் ஆதாரமாகவும் கொள்வதேன்? பிராமணர் தமிழரானால் சமஸ்கிருதத்துக்கு அவர்கள் உயர்வு கற்பிப்பதேன்? தமிழ் நூல்கள் எல்லாம் வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவைகளே எனப் புனைந்து கூறுவதேன்? பிராமணர் தமிழர்களானால் அவர்கட்கு மட்டும் தனி சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்கள் ஸ்தாபித்திருப்பதேன்? அப்பள்ளிக்கூடங்களில் தமிழர்கட்கு அனுமதியளி யாததேன்? வேதமோத தமிழர்க்கு உரிமையில்லையெனக் கூறுவதேன்? பிராமணர் தமிழர்களானால் சமஸ்கிருத மந்திரஞ் சொல்லி கலியாண இழவுச் சடங்குகள் நடத்துவதேன்? பிராமணர் தமிழரானால் தமிழர் அநுஷ்டிக்காத பலவகைப்பட்ட நோன்புகளையும் சடங்குகளையும் பிராமணர் மட்டும் அநுஷ்டிப்பதேன்? எப்பொழுதும் தமிழர்களுடன் கலக்காமல் தனித்து வாழ்ந்து வருவதேன்? தமிழர் பார்த்தால் திருஷ்டி - தோஷம் எனக் கூறி பிராமணன் மறைவிடங்களில் உண்பதேன்? இவ்வண்ணம் கிரியாம்சையில் தாம் அந்நியர் என்று காட்டிக் கொள்ளும் ஒரு கூட்டத்தார் வாய்ப்பேச்சளவில் மட்டும் நாமும் தமிழர் எனக் கூறினால் யாராவது லட்சியம் கொள்வார்களா? பிராமணர் மெய்யாகவே தமிழர்களானால் நடைஉடை பாவனைகளில் அவர்கள் தமிழர் ஆக வேண்டும். தமிழ் நூல்களையே தமது முதல் நூல்களாகக் கொள்ள வேண்டும். தமிழே தமது குலமொழி, கோத்திர மொழியென ஒப்புக் கொள்ள வேண்டும். சமஸ்கிருதம் தமிழைவிட உயர்ந்தது என்ற தப்பெண்ணத்தை விட வேண்டும். நடைஉடை பாவனைகளால் பழக்கவழக்கங்களால் மதாச்சாரங்களால் அந்நியர் எனக்காட்டிக்...
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.