அதுபோலவேதான், பொருளாதார ஏழ்மை, செல்வம், பேதம் ஒழிய வேண்டுமானால் அவைகளின் உற்பத்தி ஸ்தானம், அதாவது தோன்று மிடமும், காப்பு இடமும் ஒழிக்கப்பட வேண்டும். ஏழ்மைக்கும் செல்வத் திற்கும் கர்த்தாவும், காவலும் கடவுளாய் இருக்கிறது. அப்படிப்பட்ட கடவுளைக் காப்பாற்றிக் கொண்டு அல்லது அக்கடவுள் ஆணைக்கு அடங்கி னவனாய் இருந்துகொண்டு கடவுள் தன்மையை, செயலை, கட்டளையை நீ எப்படி மீற? சமாளிக்க? தாண்ட முடியும் என்று சிந்தித்துப் பார். அதனால்தான் மனித சமுதாய சமத்துவத்திற்கு மதம் ஒழிக்கப்பட வேண்டியது எப்படி அவசியமோ அதுபோல் பொருளாதார சமத்துவத்திற்கும், அதாவது பொருளா தார சமத்துவம் வேண்டுமானால் பொருளாதார பேதத்துக்கும்
...more

