இப்போது அது ஓர் உரிமையை ஸ்தாபித்துக் கொள்வதற்குக் கிளம்பி விட்டது. பிராமணர்கள் தங்களுக்குச் சட்டபூர்வமாக பதவி அளிக்கப்பட வேண்டுமென்று ஏற்படுத்திக் கொள்ளவில்லை. பிராமணரல்லாதார் இயக்கத்தினால் துவேஷ புத்தியை ஊட்டி வருகிறார்கள். மத விஷயத்திலும், கோவில் முதலிய விஷயத்திலும் பிரவேசித்து அடியோடு கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வருஷங்களாய் நாம் அனுபவித்து வரும் பாத்தியதைகளைப் பலாத்காரமாய் பிடுங்கிவிட ஆரம்பித்திருக்கிறார்கள். சுயமரியாதை இயக்க மென்று சொல்லிக் கொண்டு சிலர் செய்து வரும் கொடுமைகளையும் அவமானங் களையும் ஊர் ஊராய்ப் போய் சுற்றிப் பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும். மேற்கண்ட துவேஷ
...more

