சமுதாய அமைப்பிலே, ஜாதி பேதங்களும் மேல் கீழ் படிகளும் இருப்பதோடு நம்நாட்டிலே எங்கும் இல்லாத கொடுமை, ஒரு ஜாதிக்கு மற்றையோர் குற்றவேல் புரிந்து வாழ்வதுதான் முறை - தருமம் என்று மதச்சட்டம் வகுக்கப்பட்டு, அதன்படி சமுதாயமுறை உயர்ஜாதிக்காரரால் அமைக்கப்பட்டு இருக்கிறது. எனவே, எவ்வளவு நல்ல சீர்திருத்தம் அரசியலில் செய்யப்பட்டாலும், பலன் ஒரு வகுப்புக்கே சென்று, மற்றைய துறைகளிலே ஒரு வகுப்பு உயர்ந்து வாழ்வதைப் போன்றே அரசியலிலும் அவர்களுக்கே உயர்வும், செல்வாக்கும் ஏற்பட ஏதுவாகிறது. ஆபத்து அத்துடன் நிற்பதில்லை. எங்ஙனம் அந்த நாளில் வகுக்கப்பட்டு பல நூற்றாண்டுகளாகக் காப்பாற்றப்பட்டு வரும் சமுதாயப் பாகுபாடு ஒரு
...more

