1918, 16, 14 வருடங்களில் கல்லூரிகளிலே பரீட்சைக்குப் போனவர்கள் நம்முடைய ஆள் பத்து பேர்கள் இருப்பார்கள். ஆனால், பார்ப்பனர் நாற்பது பேர்கள் பரீட்சைக்குப் போயிருப்பார்கள். நம்முடைய ஆள்களில் 10-க்கு ஆறு பேர்கள் தேறி இருப்பார்கள். பார்ப்பனர்கள் 40-க்குப் பதினெட்டு பேர்கள் தேறி இருப்பார்கள். அவர்களைவிட திறமையிலே நாம் கூடுதல் தான். பொதுவாக எந்த விஷயங்களிலும் நாம் குறைந்தவர்கள் அல்ல; ஆனால், படிக்க முடியாத நிலைமைதான் ஏற்பட்டு விட்டது.

