100க்கு நூறு பேரும் எழுதப் படிக்கச் செய்வதே நம் இலக்கு நமக்கு - எனக்கு, நம் மக்களுக்குக் கல்வி வேண்டும் என்பதல்லாமல், கல்வியில் தகுதி, திறமை, வெங்காயம் என்பது எனது இலட்சியம் அல்ல! தகுதி திறமைக்காகப் பொதுக் கல்வி அல்ல. எனக்கு வேண்டியது நம் மக்கள் 100க்கு 100 வீதம் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நம் மக்கள் பட்டப் படிப்பில் பார்ப்பனர், அவர்கள் எண்ணிக்கையில் 100க்கு எத்தனை வீதம் பட்டம் பெற்றிருக்கிறார்களோ அத்தனை வீதம் பரீட்சை பாஸ் முத்திரை பெற்றிருக்க வேண்டும். தகுதி - திறமைக் குறைவு என்று பேசுவதாலும், கண்டுபிடிப்பதாலும் பொதுவான உத்யோகங்களுக்கு அதனால் எந்த விதமான குறைவோ, குற்றமோ ஏற்பட்டு
...more

