ஒரு நாட்டிலே அந்த நாட்டுப் பழங்குடி மக்கள் ஏராளமான பேர்கள் தற்குறிகளாய் இருப்பதும், அதே நாட்டிலே குடியேறிய வேறு ஒரு கூட்டத்தார் 100-க்கு 100 பேர் படித்திருக்கவும் காரணம் ஏன் ஏற்பட்டது? அவர்கள் ஏன் அப்படி? நாம் ஏன் இப்படி? இதைத் தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் என்ன? மதத் தத்துவத்தின்படியும், சாஸ்திரத் தத்துவத்தின்படியும் நாம் இழிவான ஜாதியாக, அதாவது சூத்திரனாக இருக்கிறோம். இந்து மத சட்டத்தில் சூத்திரன், பஞ்சமன், பறையன், பார்ப்பான் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சமர் ஜாதி என்பது மிகவும் கீழான ஜாதியாக மதிக்கப்படுகிறது. சாஸ்திரத்திலே எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள்
ஒரு நாட்டிலே அந்த நாட்டுப் பழங்குடி மக்கள் ஏராளமான பேர்கள் தற்குறிகளாய் இருப்பதும், அதே நாட்டிலே குடியேறிய வேறு ஒரு கூட்டத்தார் 100-க்கு 100 பேர் படித்திருக்கவும் காரணம் ஏன் ஏற்பட்டது? அவர்கள் ஏன் அப்படி? நாம் ஏன் இப்படி? இதைத் தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் என்ன? மதத் தத்துவத்தின்படியும், சாஸ்திரத் தத்துவத்தின்படியும் நாம் இழிவான ஜாதியாக, அதாவது சூத்திரனாக இருக்கிறோம். இந்து மத சட்டத்தில் சூத்திரன், பஞ்சமன், பறையன், பார்ப்பான் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சமர் ஜாதி என்பது மிகவும் கீழான ஜாதியாக மதிக்கப்படுகிறது. சாஸ்திரத்திலே எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால், மேலான ஜாதி தான் படிக்க வேண்டும். கீழான ஜாதி படிக்கக் கூடாது என்று இருக்கிறது. அதுமாத்திரமல்ல; அவர்களுக்கு யாரும் படிப்புச் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள். அப்படிச் சொல்லிக் கொடுத்தால் அவன் நரகத்திற்குப் போகக் கூடியவன் என்று எழுதி வைத்திருக்கிறது. ஒருவன் படித்திருப்பானானால் அவனைக் கொன்று விடலாம் என்று எழுதி வைத்திருக்கிறது. படித்திருந்தால் அவனுடைய நாக்கை அறுத்துவிடலாம் என்று எழுதி வைத்திருக்கிறது. நெஞ்சிலே படித்திருப்பவனை நெஞ்சை சுட்டுவிட வேண்டும். படிப்பதைக் காதிலே கேட்டிருந்தால் காதிலே ஈயத்தை விட வேண்டுமென்றும் எழுதி வைத்திருக்கிறது. ஆகையினால்தான் நம்மவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக படிப்பதற்கு வசதி இல்லாமல் போய் விட்டது. நாம் படிக்க வேண்டுமானால் படிப்பதற்கு இடமும், படிப்பதற்கேற்ற வசதிகளும் இல்லாமல் போய் விட்டது. இந்தக் காரணத்தால்தான் நாம் படிப்பு இல்லாதவர்களாய் இருக்கிறோம். நான் சொல்லுவேன், இவர்கள் அதாவது பார்ப்பனர் இங்கு வந்த பிறகு நாம் எல்லாம் ஏர...
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.