மனிதன் ஏன் சமுதாயத்தில் தாழ்மையாய் இருக்கிறான் என்றால் மதத்தி னால் இழி ஜாதியாய், இழி பிறப்பாய் இருக்கிறான். அதாவது ஜாதி என்றால் பிறப்பு என்றுதான் அருத்தம் (ஜாதி என்பதெல்லாம் பிறப்பு என்பதைப் பொறுத் தேயாகும்) பிறப்பினால் ஜாதிக்கு உயர்வு தாழ்வுக்கு ஆதாரம் மதமேயாகும். எந்த மதம் என்று கேட்பீர்கள். ஜாதியினால் (பிறப்பால்) கீழ் ஜாதியாய் இருக்கிற மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற மதம் எதுவோ அந்த மதம்தான். இன்று நீங்கள் கீழ்ஜாதியாய் இருக்கிறீர்கள் என்றால் எதனால்? நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற மதமாகிய இந்துமதம் என்பதுதான் உங்கள் இழிவுக்கு ஆதாரமாய் இருக்கிறது. எனவே, இந்துமதம் ஒழியாமல், இந்து மதம்
...more

