உதாரணமாக ஒரு அய்.ஏ.எஸ். படிக்காத திரு.காளிதாஸ் நாயுடுவைவிட ஒரு அய்.ஏ.எஸ். படித்த திரு.வேதநாராயணன் கலெக்டர் வேலையில் எந்த விதத்தில் அதிகம் தகுதி, திறமை, ஒழுக்கம், நாணயம், அனுபவம் உடையவராவார்? இன்ன இன்ன உத்தியோகத்திற்கு இன்னின்ன பட்டம் பாஸ் செய்த தகுதி வேண்டும் என்று ஏற்பாடு செய்துகொண்ட பிறகு, மேலும் தகுதி - திறமை என எந்த ஏற்பாட்டின்படி குறை சொல்லப்படுகிறது?

