ஆச்சாரியாரும் சத்தியமூர்த்தியாரும் எங்கிருந்து தொப்பென்று குதித்தார்கள்? அவர்கள் என்ன ராமன், கிருஷ்ணன் போல் ராக்ஷதர்களை (தமிழர்களை) அழிக்க அவதார மெடுத்தவர்களா? இல்லை இல்லை. அவர்கள் தகப்பன்மார்களுக்கு நாம் திதி, தெவசம், சங்கல்பம், அஷ்டோத் தரம், சகஸ்திரநாமம், அபிஷேகம், உற்சவம், கல்யாணம், சாந்திமுகூர்த்தம், எட்டு எழவு, கல்லெடுப்பு என்னும் பேரால் அழுத பணங்களும் காசுகளும் அரிசி, பருப்பு, செருப்பு புடவைகளும் அல்லவா இன்று ஆச்சாரியார், சாஸ்திரியார், அய்யங்கார், அல்லாடியார், மூர்த்தியார் என்கின்ற விஷக் கிருமிகளாக நம்மை அரித்து தின்கின்றன என்று கேட்கிறேன்.

