Balasubramaniam Vaidyanathan

77%
Flag icon
பிரபஞ்சம் ஓர் அறியமுடியாமை. அனுபவத்திற்கு எட்டிய பிரபஞ்சத்தினூடாக நாம் கற்பனையை விரித்துப் பிரபஞ்சத்தை அளக்க முயல்கையில் உருவாவது குறியீட்டு மொழி. இவ்வாறு கற்பனை மூலம் இகவாழ்வை பிரபஞ்ச நியதியுடன் இணைப்பதை செவ்வியல் மார்க்ஸியம் ஒருவகை அதிகார / சுரண்டல் உத்தியாக மட்டும் கண்டு வந்துள்ளது. ஆனால் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் மனிதனுக்கு ஒரு பிரபஞ்ச நியாயிகரணம் தேவைப்படுகிறது. மிகமிகப் பூர்வநிலைகளில் உள்ள பழங்குடிகளுக்குக்கூட இவ்வாறு தங்கள் ஒவ்வொரு வாழ்க்கைச் செயலையும் பிரபஞ்ச சலனத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்குரிய ஐதீகங்களும் சடங்குகளும் அவர்களுக்குத் தேவையாகின்றன. ...more
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating