இந்நூற்றாண்டின் நடைமுறை வாதச் சித்தாந்தம் ஒன்று மதங்களுடன் என்ன உறவைக் கொள்ளமுடியும் என்றும் கேட்டிருந்தீர்கள். இரண்டு நுட்பமான பிழைகளைச் செய்கிறீர்கள். உங்களுக்கு மதத்துடன் வெளிப்படையான புறவயமான உறவுதான் இல்லை. உங்களுக்கு திடமான ஒழுக்கவியலும் (எதிக்ஸ்) மதிப்பீட்டியலும் (ஆக்ஸியாலஜி) இருக்கிறது. ஆகவே உங்களுக்கு மெய்யியலும் உண்டு. அம்மெய் யியலின் உணர்வுரீதியான சாரம் மதங்களிடமிருந்து உங்களுக்குக் கிடைத்ததேயாகும். அம்மெய்யியலை உங்கள் அந்தரங்க மதங்களுடன் மொழியாடல் சார்ந்து வெளிப்படுத்துவதனால்தான் நேரடியான உரையாடல் உங்களுக்குத் தேவையில்லாமல் இருக்கிறது. உன்னதம், சாரம், அறம், ஆன்மா என்று நீங்கள்
இந்நூற்றாண்டின் நடைமுறை வாதச் சித்தாந்தம் ஒன்று மதங்களுடன் என்ன உறவைக் கொள்ளமுடியும் என்றும் கேட்டிருந்தீர்கள். இரண்டு நுட்பமான பிழைகளைச் செய்கிறீர்கள். உங்களுக்கு மதத்துடன் வெளிப்படையான புறவயமான உறவுதான் இல்லை. உங்களுக்கு திடமான ஒழுக்கவியலும் (எதிக்ஸ்) மதிப்பீட்டியலும் (ஆக்ஸியாலஜி) இருக்கிறது. ஆகவே உங்களுக்கு மெய்யியலும் உண்டு. அம்மெய் யியலின் உணர்வுரீதியான சாரம் மதங்களிடமிருந்து உங்களுக்குக் கிடைத்ததேயாகும். அம்மெய்யியலை உங்கள் அந்தரங்க மதங்களுடன் மொழியாடல் சார்ந்து வெளிப்படுத்துவதனால்தான் நேரடியான உரையாடல் உங்களுக்குத் தேவையில்லாமல் இருக்கிறது. உன்னதம், சாரம், அறம், ஆன்மா என்று நீங்கள் குறிப்பிடுபவற்றை இப்போது மிகக்குறுகிய ஒரு உள்வட்டத்திற்குப் புரியும்படித்தான் உங்களால் கூற முடிகிறது. மரபிலிருந்து எதையும் பெற்றுக்கொள்ளாத தனிநபர் குறிமொழியாக உங்கள் படைப்பு மொழி இருப்பதே உங்கள் எழுத்தின் மிகப்பெரிய பலவீனம். மேலும் விரிவான தீவிரமான தளத்தில் உங்கள் படைப்பியக்கம் நடைபெற்றிருக்குமெனில் நீங்கள் மதங்களின் குறியீட்டு மொழியை நாடியிருக்கக் கூடும். அக்குறியீடுகளை உங்களுக்காக மறுபடைப்பு செய்து கொண்டிருக்கக் கூடும். மதங்களுடன் ஆக்கபூர்வமான ஒரு தீவிர விவாதம் உங்களுக்கு நிகழ்ந்திருக்கும். நிகழாது போனது. துரதிர்ஷ்டமே. இரண்டாவது அம்சம் மதங்களை பிற நவீனத்துவ, மார்க்ஸிய சிந்தனையாளர்களைப் போலவே நீங்களும் ஒரு நம்பிக்கைக் கட்டுமானமாகவும், அதிகாரக் கட்டுமானமாகவும் மட்டும் பார்க்கிறீர்கள். அது தேடல்களின் வெளியும்கூட. மதங்களை உருவாக்கும், மாற்றியமைக்கும் மானுட எழுச்சிகள் அனைத்தையும் கணக்கில் கொண்டு யோசிப்பவர்களுக்குக் கிடைப்பது இந்த முகமே. அந்தத் தேடல்தான் மதங்களுக்கான குறியீட்டு மொழியை உருவாக...
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.