’தேடல் - படிமங்கள் - வழிபாடு – அதிகாரம்’ என்பதே மதம் இயங்கும் சூத்திரம். இதுவே வரலாறு இயங்கும் சூத்திரமும் என்று படுகிறது. மனித மனமும் இப்பாதையில்தான் இயங்குகிறது. எனவேதான் ஒவ்வொரு அறிவியக்கத்தையும் காலப்போக்கில் நாம் மதமாக மாற்றிக்கொள்கிறோம். மார்க்ஸியம் ஒரு சோட்டா செமிட்டிக் மதம். ஆனால் பெரும் மதங்களுக்கு அவற்றின் சாரமாக ஒரு மெய்யியல் அடித்தளம் உள்ளது. அதிகாரம் உருவான உடனேயே அம்மெய்யியலில் இருந்து அவ்வதிகாரத்தை எதிர்க்கும் மாற்று சக்தியும் முளைத்துவிடுகிறது. அது அம்மதத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. கிறிஸ்தவத்திலும் இஸ்லாமிலும் பௌத்தத்திலும் இந்து மதங்களிலும் எல்லாம் இப்படிப்பட்ட
’தேடல் - படிமங்கள் - வழிபாடு – அதிகாரம்’ என்பதே மதம் இயங்கும் சூத்திரம். இதுவே வரலாறு இயங்கும் சூத்திரமும் என்று படுகிறது. மனித மனமும் இப்பாதையில்தான் இயங்குகிறது. எனவேதான் ஒவ்வொரு அறிவியக்கத்தையும் காலப்போக்கில் நாம் மதமாக மாற்றிக்கொள்கிறோம். மார்க்ஸியம் ஒரு சோட்டா செமிட்டிக் மதம். ஆனால் பெரும் மதங்களுக்கு அவற்றின் சாரமாக ஒரு மெய்யியல் அடித்தளம் உள்ளது. அதிகாரம் உருவான உடனேயே அம்மெய்யியலில் இருந்து அவ்வதிகாரத்தை எதிர்க்கும் மாற்று சக்தியும் முளைத்துவிடுகிறது. அது அம்மதத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. கிறிஸ்தவத்திலும் இஸ்லாமிலும் பௌத்தத்திலும் இந்து மதங்களிலும் எல்லாம் இப்படிப்பட்ட புதிய பீறிடல்கள் மீண்டும் மீண்டும் உருவெடுப்பதை வரலாற்றில் காணலாம். ஆனால் மார்க்ஸியம் உலகமெங்கும் அதிகார அமைப்பாக உறைந்தபோது புகிய எதிர்ப்பியக்கம் எதையும் மார்க்ஸியத்தின் சாராம்ச தரிசனம் தன்னிலிருந்து பிறப்பிக்கவில்லை. உருவான எதிர்ப்பியக்கங்கள் எல்லாமே மார்க்ஸியத்திற்கு எதிரான கருத்துநிலைகளால் உருவாக்கப்பட்டவை. இறுக்கமான நடைமுறை விதிகளினாலான இஸ்லாமிலிருந்துகூட சூஃபிசம் என்ற அதிதீவிர மாற்றுப் போக்கு உருவாயிற்று. மார்க்ஸியத்தில் அப்படி ஏதும் நிகழவேயில்லை. இதனால்தான் மார்க்ஸியத்தின் பெயரால் கட்டப்பட்ட அதிகார பீடங்கள், வரலாற்றின் போக்கில் இயல்பான மாணத்தைத் தழுவும்போது மார்க்ஸியமே சரிந்துவிட்டது எனும் பிரமை ஏற்படுகிறது. (மேற்கத்திய கல்வித்துறை மார்க்ஸியம் ஒரு சொற்சிலம்பம். அதை நான் இம்மியும் பொருட்படுத்தவில்லை. மார்க்ஸியம் அதன் உண்மையான தீவிரத்துடன் ஒருபோதும் கல்வித்துறைக் குறுங்குழுவாதமாக இயங்க முடியாது. மார்க்ஸியத்தின் பீடம் மக்களின் இதயம்.) இதற்குக் காரணம் அதன் மெய்யியல் வளர்ச்சியின்...
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.