மார்க்ஸிசத்தில மூணு அடிப்படைகள் உண்டு. ஒண்ணு இலட்சியவாதம், மானுட குலத்தின் எதிர்காலம் பத்தின பெரும் கனவு. அது இப்ப இல்லை. உண்டுண்ணு சொல்றவன் மூடன், இல்லை அயோக்கியன், இல்லாட்டி அரசியல் நிபுணன் - என்னை மாதிரி. இன்னொண்ணு அதோட தத்துவக் கட்டுமானம்: அதாவது முரண்நிலை இயங்கியல். ஐன்ஸ்டீனோட சார்புநிலைத் தத்துவமும் இரட்டை இருப்புத் தத்துவமும் வந்தபிறகு அதோட அடிப்படை இளகிட்டிருக்கு. உயர்தத்துவ விவாதங்களில இப்ப அது செல்லுபடியாகிறதில்லை. நடைமுறை கோட்பாடுகளில் இன்னும் கொஞ்ச நாள் இருந்திட்டிருக்கும். மூணாவது அம்சம் அதனோட அரசியல் கோட்பாடும் நடைமுறையும். வர்க்கப்போர் இப்ப குறியீட்டுரீதியான போரா ஆயிடுச்சி.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)