தத்துவார்த்தமான கருத்துக்கு எப்பவும் ஒரு அபூர்வத் தன்மை இருக்கு. ரொம்ப நல்லா தெரிஞ்ச விஷயமா இருந்தாக்கூட தத்துவார்த்தமா சொல்றப்ப அபூர்வத் தன்மை வந்திடுது. அதைச் சொல்ற முறைல வரக்கூடிய ஆச்சரியத்த சொல்லல்ல. அந்தக் கருத்து சட்டுண்ணு ஒரு குறிப்பிட்ட விதத்தில மொத்த வாழ்க்கையையும் அளந்து வகுத்துடறதனால வாற அபூர்வத்தன்மை அது. இப்ப உதாரணமா சார்த்தோட ஒரு வரி இருக்கே. ரெண்டு மனுஷங்களுக்கு மத்தியில இருக்கிற உறவு ஒத்துமையால இல்ல மோதலினாலத்தான் தீர்மானிக்கப்படுதுண்ணு. நான் அதை ஏத்துக்கிடலை. ஆனா அதைக் கேட்ட உடனே வாழ்க்கை மளமளன்னு ஒரு குறிப்பிட்ட வரிசையில வந்து நிண்ணு அணி வகுக்க ஆரம்பிச்சிடுது.”

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)