“மதங்களுக்கு இந்த உலகை இந்த வாழ்வை, நிராகரிச்சாகணும் தோழர். அப்பதான் புனிதம்னு ஒண்ணை உருவாக்க முடியும். இந்த உலகப்பசுவைவிட உசத்தியான பசு காமதேனு. இந்த உலகத்து மரத்தவிட உசத்தியானது கற்பக விருட்சம். இந்த உலகத்தைவிட உசத்தியானது சொர்க்கம். இப்பிடியே இந்த உலகத்தைப் போதாததா, குறைபாடு நிறைஞ்சதா கற்பிச்சிட்டாங்க மதவாதிகள். பரத்தை நிலைநாட்டறதுக்காக இகத்தை நிராகரிச்சிட்டாங்க. இந்த உலகத்தையும் உலக சுகங்களையும் நிந்திக்காத மதம் இல்லை. ஆனா பூமிமீது மனுஷனுக்கு ஆதியான ஈர்ப்பு உண்டு. அதன் மடியில் அவன் வாழ்க்கை சந்தோஷமானதுதான். எல்லாப் பழங்குடிகளும் சந்தோஷமாத்தான் இருக்காங்க. பரத்துக்காக இகத்தை
“மதங்களுக்கு இந்த உலகை இந்த வாழ்வை, நிராகரிச்சாகணும் தோழர். அப்பதான் புனிதம்னு ஒண்ணை உருவாக்க முடியும். இந்த உலகப்பசுவைவிட உசத்தியான பசு காமதேனு. இந்த உலகத்து மரத்தவிட உசத்தியானது கற்பக விருட்சம். இந்த உலகத்தைவிட உசத்தியானது சொர்க்கம். இப்பிடியே இந்த உலகத்தைப் போதாததா, குறைபாடு நிறைஞ்சதா கற்பிச்சிட்டாங்க மதவாதிகள். பரத்தை நிலைநாட்டறதுக்காக இகத்தை நிராகரிச்சிட்டாங்க. இந்த உலகத்தையும் உலக சுகங்களையும் நிந்திக்காத மதம் இல்லை. ஆனா பூமிமீது மனுஷனுக்கு ஆதியான ஈர்ப்பு உண்டு. அதன் மடியில் அவன் வாழ்க்கை சந்தோஷமானதுதான். எல்லாப் பழங்குடிகளும் சந்தோஷமாத்தான் இருக்காங்க. பரத்துக்காக இகத்தை இழந்துடறதில்லை. வாழ்க்கையோட கடைசித் துளியையும் நக்கிட்டு சாகத்தான் ஒவ்வொரு மனுஷனும் ஆசைப்படறான். எதுக்குப் புனிதம்னு ஒண்ணை உருவாக்குது மதம்? மனிதக் கலாச்சாரம்னு ஒண்ணு உருவாக ஆரம்பிச்சப்ப உருவான சிக்கல் அது. மனுஷனுக்குள்ள உள்ள இச்சை கட்டற்றது. அதுக்கு உலகமே வேணும். அப்ப மனுஷனுக்கு மனுஷன் எதிரியாத்தான் இருக்க முடியும். கூடி வாழணும்னா ஒவ்வொரு மனுஷனும் கொஞ்சம் இழந்தாகணும். கொஞ்சம் இச்சைகளைக் கட்டுப்படுத்தியாகணும், எதன் பேரில இழக்கிறது? எதை எதிர்பார்த்து தியாகம் பண்றது? அப்பதான் இந்த மாதிரி இதவிட மேலான ஒண்ணு அங்க இருக்கு, இது விட்டுக் கொடுத்தா உனக்கு அங்க அது கிடைக்கும்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. புனிதம் பிறந்தது. சொர்க்கம் பிறந்தது. தியாகம்தான் மகத்தான மானுட உணர்வுண்ணு கொள்கை பிறந்தது. மதங்கள் அந்த அடிப்படைகளை வளர்த்து எடுத்துத் தங்கள் அதிகாரத்தை உருவாக்கிக் கொண்டன. பல்லாயிரம் வருஷமா இந்தப் பூமிமேல பூமியைவிட மேலான ஒரு புனித பூமி பத்தின கற்பனையை நிலைநிறுத்தி, அது வழியா தன் ஆதிக்கத்தை உருவாக்கிச்சு மதம்....
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.