தனிமனித உறவுகளில் எனக்கு எந்த விதமான அரசியலும் சித்தாந்தமும் இலட்சியவாதமும் பொருட்டே அல்ல. ஒழுக்கமும் பொது நியாயங்களும்கூட சிறுசிறு சஞ்சலங்களுக்குப் பிறகு ஒதுங்கி வழிவிடக் கூடியவையே. பொருட்படுபவையே வேறு. என் பிம்பங்கள் பற்றிய எனது அச்சங்களும் எதிர்பார்ப்புகளும் முதன்மையானவை. என் பிம்பம் எத்தனை தூரம் பிறரில் செல்லுபடியாகிறது என்பது என் உறவுகளைத் தீர்மானிக்கும் முக்கியமான அம்சம். பாதி உறவுகளை பிம்பங்களை உருவாக்கவும், நிலைநிறுத்தவும், எனக்கு நானே அதை நம்பிக் கொள்ளவும்தான் உருவாக்கி நடத்திச் செல்கிறேன் என்று படுகிறது. எனது பலவீனங்களின்போது எனக்கு ஊன்றுகோலாகும் உறவுகளை வேறு வழியின்றி
தனிமனித உறவுகளில் எனக்கு எந்த விதமான அரசியலும் சித்தாந்தமும் இலட்சியவாதமும் பொருட்டே அல்ல. ஒழுக்கமும் பொது நியாயங்களும்கூட சிறுசிறு சஞ்சலங்களுக்குப் பிறகு ஒதுங்கி வழிவிடக் கூடியவையே. பொருட்படுபவையே வேறு. என் பிம்பங்கள் பற்றிய எனது அச்சங்களும் எதிர்பார்ப்புகளும் முதன்மையானவை. என் பிம்பம் எத்தனை தூரம் பிறரில் செல்லுபடியாகிறது என்பது என் உறவுகளைத் தீர்மானிக்கும் முக்கியமான அம்சம். பாதி உறவுகளை பிம்பங்களை உருவாக்கவும், நிலைநிறுத்தவும், எனக்கு நானே அதை நம்பிக் கொள்ளவும்தான் உருவாக்கி நடத்திச் செல்கிறேன் என்று படுகிறது. எனது பலவீனங்களின்போது எனக்கு ஊன்றுகோலாகும் உறவுகளை வேறு வழியின்றி சார்ந்திருக்கிறேன். ஆதரவின்றி தவிக்கும் தருணங்களைத் தவிர பிற சமயங்களில் அவற்றை வெறுக்கிறேன் உதாசீனம் செய்ய முயல்கிறேன். பலவீனத்தின் தருணங்களில் நான் அறியும் சுயகீழ்மை உணர்வை வெல்ல அவர்களிடம் (ஓர் எல்லைக்குட்பட்டு) முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறேன். அவர்கள் அம்முரட்டுத்தனத்தை கன்றுக்குட்டியின் முட்டல் போல எடுத்துக்கொண்டு சுதாரித்துக்கொள்வது கண்டு கூசுகிறேன். என் ஆளுமை மடங்கித் தலைவணங்கும் உறவுகள் மிக அபூர்வமானவை. அந்த மலைகளை மிதித்து ஏறி உச்சியில் நின்று குனிந்து பார்க்கும் சவாலை உடனடியாக ஏற்றுக் கொள்கிறேன். இவ்வாறு பிரிப்பது என் மூளை. என் உறவுகளில் இந்த மூன்று அம்சங்களும் எப்போதும் கலந்தபடித்தான் உள்ளன. இவையன்றி சகமானுட உறவில் எந்த வகையான அந்தரங்கத்தையும் நான் உணரவில்லை. இதுகுறித்து எனக்கு ஏமாற்றம்தான். மன ஆழத்தில் உள்ள குளிர்ந்த சுனையில் பிரதிபலிக்கும் சில முகங்களையாவது கொண்டிருக்கிறேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்த நாட்கள் உண்டு. அதை எட்டிப் பார்க்க முயன்றால் அவை கலைந்துபோய், என் முகம் மட்டும் த...
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.