Kindle Notes & Highlights
நான் எல்லாத்துக்கும் ஒரு பதில் வச்சிருக்கேன். உண்டுன்னு சொல்லலாம் இல்லென்னு சொல்லலாம். உண்டுன்னு நம்பறவங் களுக்கு உண்டு. இல்லென்னு நினைக்கிறவங்களுக்கு இல்லெ."
தன் வீட்டுக் குப்பையே அடுத்த வீட்டு வாசல்லெயும் கொல்லையிலேயும் வாரிக் கொட்றதே நம்ம ஜனங்களுக்கு ஆதிகாலப் பழக்கமா வந்துண்டிருக்கு. நான் நன்னா இருந்தால் போரும். என் பிள்ளை குட்டி நன்னாயிருந்தால் போரும், என் வீட்டுச் சாக்கடை அடுத்த வீட்டுக்கு ஓடிப் போயிடணும். நடுத் தெருவிலே ஓடணும். தெருவிலே நடக்கிறவன் மிதிச்சிண்டு போறானோ தாண்டிண்டு போறானோ, நமக்கென்னன்னுதானே இருக்கு இந்த தேசத்து ஜனங்கள்ளாம். ஏன் இப்படியெல்லாம் தனிக் கூட்டிலே தனியா இருக்காப்பல இருக்கு இந்த ஜனங்க?"
அவன் அவன், அவன் அவன் வேலையைப் பார்த்துண்டு, பிறத்தியாருக்கு ஹிம்சை பண்ணாம, தனக்குப்போதும்கற இடத்திலெ மட்டும் இருந்துண்டிருந்தா சாமி தானாக் கொடுத்திண்டிருக்கும்-"