இன்னுமொரு விஷயம், கருத்தியல் அல்லது அமைப்பு சார்ந்த வாசகர்களுக்கு அவர்களின் கூட்டுச் செயல்பாட்டு தளம் சார்ந்து ஒரு வெளிப்பாட்டு முறையும், தர்க்கமும், மொழியும் அமைந்து விடுகிறது. ஆனால் அந்தரங்க வாசகனால் தன்னை தெளிவாகச் சொல்லி விட முடிவது இல்லை. அவன் வாசகனே ஒழிய எழுத்தாளனோ கருத்தியல் செயல் பாட்டாளனோ அல்ல. அவனுக்கு தன் மொழியில் உள்ள போதாமை குறித்த அச்சமும், தயக்கமும் அதிகம். எந்த எழுத்தாளனும் இப்படிப்பட்ட அந்தரங்க வாசகர்களையே வாசகர்களாக எண்ணுவான். பொருட் படுத்துவான்.