ஆனால் நடை முறையில் தன்னை ஒரு கருத்தியலுடன், அல்லது அமைப்புடன் பொருத்திக் கொண்டு அதன் துளியாக நின்று வாசிக்கும் வாசகர்கள் மிக அதிகம். அத்துடன் அந்தரங்க வாசகர்களை விட இவர்களே அதிகமாகப் பேசி, எழுதி தங்களை வெளிக்காட்டுகிறார்கள். நாம் வாசக எதிர்வினையாக காண்பது அதிகமும் இவர்கள் குரலையே. அந்தரங்கமான வாசிப்பு கொண்டவர்களுக்கு அவர்களின் எதிர் கொள்ளல் மிக அந்தரங்கமானதே. இவர்களில் மிக மிகச் சிலரே அந்த எழுத்தாளனிடமாவது தங்கள் வாசிப்பை தெரிவிப்பவர்கள்.