அதைவிட முக்கியமான உத்தி அது அந்நகரை காட்சி வடிவமாக காட்ட முயல்கிறது என்பதே. காட்சிசார்ந்த விவரணைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு சிற்பம் கீழிருந்து பார்த்தால் எப்படி இருக்கும், மேலே நின்றால் எப்படி இருக்கும், தூரத்தில் எப்படி தெரியும், அண்மைக்குச் செல்லச் செல்ல எப்படி மாறும் என அது காட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த உத்தி காரணமாக கொஞ்சநேரத்தில் வாசகன் விஷ்ணுபுரத்தை ‘பார்க்க’ ஆரம்பித்துவிடுவான். இதுவும் நம்பவைக்கும் உத்தியே.