நாம் எப்படி இலக்கியப் படைப்புகளுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம்? நாம் வாழும் அன்றாட யாதார்த்தம் அதில் இருப்பதனால் என்றுதான் முதலில் தோன்றுகிறது. ஆனால் அது உண்மையல்ல. நம் அன்றாட யதார்த்தம் ‘அப்படியே’ ஓர் இலக்கிய ஆக்கத்தில் இருந்தால் நமக்கு அது பெரும் சலிப்பையே ஊட்டும். அந்த யதார்த்தத்தை மீறவே நாம் வாசிக்கிறோம்.