திடீரென்று இந்த உலகம் முழுவதும் அவருக்குத் தாயாகத் தோன்றிற்று. கெல்லி, மாஸ்கி, சுவரில் மாட்டியிருந்த வர்ணம் போன ஏசு, மூலையில் அந்த அழுக்குச் சாய்வு நாற்காலியில் ஒண்டிக் கண்ணை மூடிக் கிடந்த பூனைக்குட்டி எல்லாமே அவருக்குத் தாயாகத் தோன்றின. இருதயம் முழுதும் விம்மிக்கொண்டே அந்த அறை, சாலை, வெளிவானம் எல்லாவற்றிலும் பம்முவது போலிருந்தது.