Kindle Notes & Highlights
திடீரென்று இந்த உலகம் முழுவதும் அவருக்குத் தாயாகத் தோன்றிற்று. கெல்லி, மாஸ்கி, சுவரில் மாட்டியிருந்த வர்ணம் போன ஏசு, மூலையில் அந்த அழுக்குச் சாய்வு நாற்காலியில் ஒண்டிக் கண்ணை மூடிக் கிடந்த பூனைக்குட்டி எல்லாமே அவருக்குத் தாயாகத் தோன்றின. இருதயம் முழுதும் விம்மிக்கொண்டே அந்த அறை, சாலை, வெளிவானம் எல்லாவற்றிலும் பம்முவது போலிருந்தது.
எல்லாவற்றுக்கும் கடைசி நியாயம் ஆத்ம திருப்தி ஒன்றுதான். இந்த முக்கியமான விஷயத்தைக் கடைசியில் போட்டுத் தொலைத்திருக்கிறார்கள் நம் நாட்டில் தர்ம சாஸ்ரம் எழுதினவர்கள். வேதம் சாஸ்திரம், பெரியவர்களின் ஆசாரம் ஒன்றும் அனுமதிக்காவிட்டால் ஆத்மதிருப்தி என்று கடைசித் துரும்பாக இதை வைத்திருக்கிறார்கள். கடைசித் துரும்பாக இருக்கிற பல்லும் நியாயமும் பல சமயங்களில் மற்ற எதற்கும் இருப்பதில்லை”