எந்த ஒரு புலன்வழி அறிதலும் அதன் உச்சத்தை அடையும்போது மதுவாகிறது. ஓசை இசையாகிறது. வண்ணங்கள் ஓவியமாகின்றன. பொருட்கள் சிற்பமாகின்றன. அசைவுகள் நடனமாகின்றன. மொழி கவிதையாகிறது. அதைப்போன்றே சுவை என்பது தேனாகிறது. அந்த மதுவை காமம் என்று கொள்வது உலகியலோர் இயல்பு.