‘ஓநாய்க்குட்டி, உனக்கு இன்னும் என்னை நினைவிருக்கிறதா? நான் உன்னுடைய அம்மா. நான் உனக்காக ஏங்குகிறேன். இவ்வளவு காலமும் உன்னை எதிர்பார்த்தபடியே தேடிக்கொண்டிருந்தேன். கடைசியாக உன்னுடைய குரலைக் கேட்டுவிட்டேன். என் அன்புக் குழந்தையே, உடனே உன் அம்மா விடம் ஓடி வா. நாங்கள் எல்லோருமே உனக்காகத் தவித்துக் கொண்டிருக்கிறோம். வா... வா... வா...’