ஆதரவற்ற, வலுவிழந்த ஜீவனை அவன் தட்டிக் கொடுத்தான். அவனுடைய இதயம் அச்சத்தால் படபடத்தது. கொல்லும் சுபாவமுடைய ஓநாய்களிடம் படிப்படியாக நெருக்கம் கொள்வதைக் காட்டிலும், இதமும் அழகும் அமைதியை நேசிக்கும் குணமும் கொண்டு தாவரங்களை உண்டு வாழும் இவற்றைக் காப்பாற்ற அவன் ஏன் முயற்சிக்கக் கூடாது?