‘‘எங்களுடைய குழந்தைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டுமென நாங்கள் எப்போதுமே விரும்பியிருக்கிறோம். இனி, நோயாளிகளை எருது வண்டிகளிலோ அல்லது குதிரை வண்டிகளிலோ எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி வராது என்று நம்புகிறோம். எங்களிடம் மருத்துவமனை இல்லாததால், தேவையில்லாமல் பலர் இறக்கும்படி ஆகியிருக்கிறது. ஆனால், இனி மேய்ச்சல் நிலம் என்னாகும்?