‘‘இதை நம்மால் ஒழுங்காகச் செய்து முடிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. சிக்கல்கள் நம்மை எதிர்நோக்கி இருக்கின்றன’’ என்றான் ஜென். ‘‘நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ‘எல்லாக் குள்ளநரிகளும் மடியும்வரை, நாம் சண்டையை நிறுத்தப் போவதில்லை’ என்று இந்த நாடே பாடிக்கொண்டிருக்கிறது. ஆனால் நாமோ ஒரு ஓநாய்க்குட்டியை வளர்ப்பதன் மூலம், பகைவனிடமும் நட்பு பாராட்டுகிறோம்.’’